திருமணத்திற்கு பிறகு முத்தக் காட்சியில் நடிப்பீர்களா?: தீபிகா என்ன சொன்னார் தெரியுமா?
Recommended Video

மும்பை: திருமணமாகிவிட்டால் முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டீர்களா என்று தீபிகாவிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் தான் அல்டிமேட்.
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர் சிங்கும் இத்தாலியில் வைத்து கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார்கள். ரன்வீர் சிங் தற்போது தனது சிம்பா பட விளம்பர நிகழ்ச்சிகளில் பிசியாக உள்ளார்.
தீபிகா புதுப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

முத்தக் காட்சிகள்
திருமணமாகிவிட்டதால் இனிமேல் முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்பீர்களா என்று தீபிகாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் ச்ச்சீ, என்று தெரிவித்துள்ளார். தீபிகா முத்தக் காட்சிகளில் நடித்தாலும் அதை ரன்வீர் சிங் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார் என்பது அனைவருக்கும் தெரியும்.

ரன்வீர் சிங்
நான் ரன்வீர் சிங் படுகோனேவின் மனைவி என்று தீபிகா தெரிவித்துள்ளது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. திருமணத்திற்கு பிறகு கணவரின் பெயரை மனைவியின் பெயருக்கு பின்னால் போடுவது வழக்கம். ஆனால் தீபிகாவோ உல்டாவாக கூறியுள்ளதால் ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

பணம்
இத்தாலியில் பெரும் பொருட்செலவில் தீபிகா, ரன்வீர் திருமணம் நடந்தது. இருக்கும் காசை எல்லாம் தீபிகா திருமணத்திற்கே பயன்படுத்திவிட்டால் பின்னால் என்ன செய்வார் என்று நெட்டிசன்கள் கலாய்த்தனர். இது குறித்து தீபிகாவிடம் கேட்டதற்கு, கவலை வேண்டாம், என்னிடம் நிறைய பணம் உள்ளது என்றார்.

குழந்தைகள்
என் வாழ்க்கையில் நடந்த சிறந்த விஷயம் என் திருமணம் தான். ஏதோ மேஜிக் போன்று உள்ளது. குழந்தை பெறுவது குறித்து நான் மட்டும் முடிவு செய்ய முடியாது, தீபிகாவும் சேர்ந்து தான் தீர்மானிக்க வேண்டும். அனைத்து முடிவுகளை எடுக்கும் பொறுப்பை தீபிகாவிடம் விட்டுவிட்டேன். முடிவு எடுப்பதில் அவர் வல்லவர் என்று ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











