குஷ்புவுக்கு மறுபடியும் ஒரு கோவில் கட்டிடுவாங்களோ?
சென்னை: நடிகை குஷ்புவுக்கு மறுபடியும் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திவிடுவார்களோ?
குஷ்பு கோலிவுட்டில் உச்சத்தில் இருந்த நேரத்தில் அவருக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். அவர்கள் குஷ்பு மீது வைத்திருந்த பாசத்தை வெளிப்படுத்த நினைத்த விதம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது.
அவர்கள் அப்படி என்ன செய்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

குஷ்பு கோவில்
திருச்சி அருகே குஷ்புவுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகமும் நடத்தினர். ஒரு நடிகைக்கு கோவில் கட்டிய செய்தி நாடு முழுவதும் தீயாக பரவியது.

நம்ம வீட்டு மகாலஷ்மி
குஷ்பு நம்ம வீட்டு மகாலஷ்மி நிகழ்ச்சிக்காக தயாரானபோது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். அதில் அவர் ஊதா கலரு சேலையில் அசத்தலாக இருந்தார்.

2வது கோவில்
குஷ்புவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, வாவ்... என்னமா இருக்கீங்க... சீக்கிரமா உங்களுக்கு இரண்டாவது கோவில் ரெடி ஆகப் போகுதுன்னு நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இடம் பார்க்கணும்
குஷ்புவுக்கு இன்னொரு கோவில் கட்ட இடம் பார்க்க வேண்டும் என்று இன்னொரு ரசிகர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்த 2 ரசிகர்களின் கருத்திற்கு குஷ்பு நன்றி தெரிவித்துள்ளார்.

இட்லி
குஷ்புவுக்கு கோவில் மட்டுமா கட்டப்பட்டது. அவர் பெயரில் தமிழகத்தில் இட்லி விற்பனையும் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











