»   »  வருவாரா இலியானா?

வருவாரா இலியானா?

Subscribe to Oneindia Tamil


இலியானாவை மீண்டும் தமிழுக்குக் கூட்டி வரும் முயற்சிகள் தொடங்கியுள்ளாம். சூர்யாவுக்கு ஜோடியாக அவரை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறதாம்.

Click here for more images

கஜினி மூலம் சூர்யாவுக்கு பெரும் பிரேக் கொடுத்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தப் படத்தை இப்போது இந்தியிலும், ஆமிர்கானை வைத்து உருவாக்கி வருகிறார்.

இந்தி கஜினியை முடித்து விட்டு தமிழுக்கு வருகிறார் முருகதாஸ். மறுபடியும் சூர்யாவை வைத்து ஒரு படத்தை உருவாக்கவுள்ளார். இந்தப் படத்தில்தான் இலியானாவை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது.

இலியானா தெலுங்கு ரசிகர்களுக்கு திவ்ய தரிசனம் தந்து கொண்டிருக்கும் தேவதை. தமிழில் அவர் கேடி என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துள்ளார். ஆனால் தொடர்ந்து அவரைத் தேடி பல தமிழ்ப் பட வாய்ப்புகள் வந்தும் கூட அவர் நடிக்க மறுத்து விட்டார். தெலுங்கே போதும் என்று தமிழை நிராகரித்து விட்டார்.

இருந்தாலும் அவ்வப்போது சிலர் ஆந்திர தேசம் போய் இலியானாவை அழைத்தபடிதான் இருக்கிறார்கள். ஆனால் முருகதாஸ் தரப்பிலிருந்து அழைப்பு வந்துள்ளதால் சட்டென்று நிராகரிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறாராம் இலியானா.

தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியின் சொந்தத் தயாரிப்பில், அவரது தம்பி பவன் கல்யாண் நடிக்கும் படத்தில் இலியானா நடிக்கிறார். சிரஞ்சீவியின் 2வது மகள் வீட்டை விட்டு ஓடி கல்யாணம் செய்ததால், அப்செட் ஆகியுள்ள சிரஞ்சீவி பட வேலைகளை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளாராம்.

இதனால் படப்பிடிப்பு நின்றுள்ளது. இதையடுத்து இலியானா குடும்பத்துடன் கோவாவுக்குப் பறந்து அங்கு கோலாகலமாக கொண்டாடி வருகிறாராம்.

Read more about: armurugadas, gajini, illiayana, kollywood
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil