அஜீத், விஜயுடன் ஜோடி சேர்வார்களா கார்த்திகா-துளசி?

By Siva

சென்னை: கார்த்திகாவும், துளசியும் தங்கள் அம்மா ராதா, பெரியம்மா அம்பிகா போன்று பிரபலமாவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ராதாவும், அம்பிகாவும் ஒரே காலகட்டத்தில் ஹீரோயினாக நடித்தனர். அக்கா அம்பிகா ஸ்லிம்மாக இருந்தால் தங்கை ராதா கொஞ்சம் பூசினாற் போல் இருந்தார். இருவரும் சேர்ந்தும், தனித்தனியாகவும் பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளனர். அவர்கள் இருவரும் சேர்ந்து கமல், ரஜினி ஆகியோர் படத்தில் அக்கா, தங்கையாகவே நடித்துள்ளனர். மேலும் நடிகர் திலகம் சிவாஜியுடன் வாழ்க்கை படத்தில் அம்பிகாவும், முதல் மரியாதை படத்தில் ராதாவும் ஜோடியாக நடித்தனர்.

பிரபு, கார்த்திக், சத்யராஜ், மோகன் உள்ளிட்ட அப்போதைய முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து அவர்கள் இருவரும் நடித்துள்ளனர். ஒரு காலத்தில் முன்னணி ஹீரோயின்களாக தமிழ் திரையுலகில் வலம் வந்தவர்கள் அம்பிகா-ராதா. இந்நிலையில் ராதாவின் மகள்கள் கார்த்திகா, துளசி ஆகியோர் நடிக்க வந்துள்ளனர்.

அஜீத்-விஜயுடன் ஜோடி சேர்வார்களா?

அஜீத்-விஜயுடன் ஜோடி சேர்வார்களா?

அப்போது ரஜினி, கமல் போன்று தற்போது அஜீத், விஜய் உள்ளனர். சூப்பர் ஸ்டார், உலக நாயகனுடன் அம்பிகா, ராதா சேர்ந்தும், தனித்தனியாகவும் நடித்தனர். அதே போன்று கார்த்திகாவும், துளசியும் அஜீத், விஜயுடன் நடிப்பார்களா.
தான் விஜயின் ரசிகை என்று துளசி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டெடியாகாத கார்த்திகா, டாப் கியரில் போகும் துளசி

ஸ்டெடியாகாத கார்த்திகா, டாப் கியரில் போகும் துளசி

கார்த்திகா நடித்ததில் கோ மற்றும் தெலுங்கு படமான தம்மு ஆகியவை தான் வெற்றி பெற்றுள்ளன. அவர் நடிக்கும் அன்னக்கொடியும் கொடிவீரனும் அவருக்கு பெரிய பெயர் வாங்கித் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவரது தங்கை துளசி கடல் படத்தை முடித்த கையோடு யான் படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

அம்பிகா, ராதா ஆவார்களா?

அம்பிகா, ராதா ஆவார்களா?

ஒரு காலத்தில் கோலிவிட்டின் முன்னணி நடிகைகளாக இருந்த அம்பிகா, ராதா வழியில் கார்த்திகாவும், துளசியும் தமிழ் திரையுலகில் வெற்றி நடைபோடுவார்களா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X