கடைசி மூச்சு உள்ளவரை சினிமாவை நேசிப்பேன்.. அமலா பால் உருக்கம்!
சென்னை: கடைசி மூச்சு உள்ளவரை சினிமாவை நேசிப்பேன் என நடிகை அமலா பால் உருக்கமாக கூறியுள்ளார்.
நடிகை அமலா பால் நடித்த ஆடை படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. பணப் பிரச்சனையால் படம் ரிலீஸாவதில் சிக்கல் இருந்தது.

அந்தப் பிரச்சனையை தீர்த்து படம் வெளியாக உதவியாக இருந்தார் நடிகை அமலா பால். இந்த படத்தில் நடிகை அமலா பால் நிர்வாண கோலத்தில் நடித்திருந்ததால் அடுத்தடுத்து ஒப்பந்தமாகியிருந்த சில படங்களில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
ஆனால் எதிர்பார்த்ததற்கு எதிராக ஆடை படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற கேசிஜி வர்கீஸ் சர்வதேச திரைப்பட விழாவில் அமலா பால் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அமலா பால் மண், மொழி, மக்கள் இவற்றிலிருந்துதான் தான் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டதாக கூறியுள்ளார். மேலும் தனது கடைசி மூச்சு உள்ளவரை சினிமாவை நேசிப்பேன் என்றும் அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications











