சுந்தர் சி.யுடன் ஜோடி சேர சம்மதிப்பாரா நயன்தாரா?
சென்னை: சுந்தர் சி. நடிக்கும் அரண்மனை படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.
சித்தார்த், ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்டோரை வைத்து சுந்தர் சி. இயக்கிய தீயா வேலை செய்யணும் குமாரு வசூலை அள்ளிக் குவித்துள்ளது. படத்தை பார்ப்பவர்கள் படம் துவங்கி முடியும் வரை வயிறு வலிக்க சிரித்துக் கொண்டே இருப்பார்கள்.
இந்த படத்தை முடித்த கையோடு அடுத்த படத்தை எடுக்க தயாராகிவிட்டார் சுந்தர் சி.

அரண்மனை
சுந்தர் சி. அடுத்ததாக பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கிறார். அதற்கு அரண்மனை என்று பெயர் வைத்துள்ளனர்.

2 ஹீரோக்கள்
அரண்மனை படத்தில் நடிக்க முன்னணி ஹீரோக்களில் 2 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இயக்கமும் நானே, நாயகனும் நானே
சுந்தர் சி. அரண்மனை படத்தை இயக்குவதுடன் தானே ஹீரோவாக நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

நயன்தாரா
அரண்மனை படத்தில் சுந்தர் சி.க்கு ஜோடியாக நடிக்குமாறு நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

ஓ.கே. சொல்வாரா நயன் ?
இரண்டாவது இன்னிங்ஸில் வெற்றிகரமாக வலம் வரும் நயன்தாரா சுந்தர் சி.யுடன் நடிக்க சம்மதிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











