வரலாற்றுப் படத்தில் நம்ம லேடி சூப்பர்ஸ்டார்... திவ்யா ஸ்பந்தனாவுடன் இணைந்து நடிக்கிறாரா நயன்தாரா?

By

சென்னை: நடிகை நயன்தாரா வரலாற்று படத்தில், தர்ஷன் ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

Recommended Video

Nayanthara into Mollywood | Mookuthi Amman | Rai Laxmi | Catherine Teresa

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. மனசினக்கரே என்ற மலையாளப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான அவர் சரத்குமார் நடித்த ஐயா படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

தொடர்ந்து சந்திரமுகி, கஜினி என்று அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடிக்க, இன்று தமிழ், தெலுங்கில் டாப் ஹீரோயின்.

கன்னடத்தில்

கன்னடத்தில்

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் அதிக படங்களில் நடித்திருந்தாலும், அவர் கன்னடத்தில் ஒரே ஒரு படத்தில்தான் நடித்திருக்கிறார். கடந்த 10 வருடத்துக்கு முன் வெளியான சூப்பர் என்ற படத்தில் உபேந்திரா ஜோடியாக அவர் நடித்திருந்தார். அதற்கு பிறகு அந்த மொழியில் அவர் நடிக்கவில்லை. அவர் இப்போது நடிப்பார் என்று கூறப்படுகிறது.

ராஜவீர மடகாரி நாயகா

ராஜவீர மடகாரி நாயகா

கன்னடத்தில் தர்ஷன் நடிப்பில் உருவாகும் வரலாற்றுப் படம், ராஜவீர மடகாரி நாயகா'. (Raja Veera Madakari Nayaka). இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியிட முடிவு செய்துள்ளனர். நடிகை சுமலதா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை ராஜேந்திர சிங் பாபு இயக்குகிறார். அம்சலேகா இசை அமைக்கிறார்.

நயன்தாரா

நயன்தாரா

பி.எல்.வேணு எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் இந்த வரலாற்றுப் படத்தை உருவாக்கி வருகின்றனர். இந்தப் படத்தில் இரண்டு ஹீரோயின்கள் என்று தெரிகிறது. ஒரு ஹீரோயினாக நடிக்க, நடிகை ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனாவைக் கேட்டுள்ளனர். கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த அவர், இதில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இன்னொரு ஹீரோயினாக நடிகை நயன்தாராவையும் கேட்டுள்ளனர். இதில் அவர் நடிப்பார் என்று தெரிகிறது.

கொரோனா

கொரோனா

இதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் கேரளாவில் நடந்துவந்தது. கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பை இப்போது நிறுத்தி வைத்துள்ளனர். அடுத்த கட்டப்படப்பிடிப்பு ஏப்ரல் இறுதியில், ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ஷூட்டிங் நடக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X