கமல்ஹாசன், ரஜினிகாந்த் படத்தில் ஹீரோயின் யாருப்பா?.. த்ரிஷா, நயன்தாராவை களமிறக்கப் போறாரா நெல்சன்?
சென்னை: கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் படங்களை இயக்கிய நெல்சன் ஜெயிலர் 2 படத்துக்குப் பிறகு மீண்டும் ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பை தட்டித் தூக்கியுள்ளார். அட்லி மற்றும் லோகேஷ் கனகராஜ் அல்லு அர்ஜுனை இயக்கி வரும் நிலையில், நெல்சனுக்கு 2 லெஜண்ட்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் ஒன்றாக 47 ஆண்டுகள் கழித்து இணைந்து நடிக்கும் நிலையில், கண்டிப்பாக ஒட்டுமொத்த ரசிகர்களும் அந்த படத்தை தியேட்டரில் கொண்டாடப்போவது உறுதி.

கமல்ஹாசன் ஹீரோவா? அல்லது ரஜினிகாந்த் ஹீரோவா? என்கிற விவாதம் ப்ரோமோவை தொடர்ந்து எழுந்து வந்த நிலையில், படத்துல ஹீரோயின்கள் யாருப்பா? என்கிற கேள்வியும் வந்து விழுந்துள்ளது.
ஹீரோ ரஜினி தான்: எல்லாம் ஓகே ஹீரோ யாருன்னு கமல்ஹாசன் கேட்கும் இடத்தில், கேக்குறாங்கள சொல்லுங்க ஜி என ரஜினிகாந்த் டார்க் ஹியூமர் ஸ்டைலில் பேசுவது கலக்கலாக உள்ளது. இந்நிலையில், ரசிகர்கள் ப்ரோமோவிலேயே ஹீரோ யாரு? வில்லன் யாரு? என நெல்சன் க்ளூ கொடுத்துள்ளார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். ரஜினிகாந்த் பெயரில் H என்கிற எழுத்தை வித்தியாசமான ஃபான்ட்டில் போட்டு அவர் தான் ஹீரோ என்பதை குறிப்பிட்டுள்ளார் என டீகோட் செய்து வருகின்றனர்.
வில்லன் கமல்: 47 ஆண்டுகளுக்கு முன்பாக கமல் ஹீரோவாகவும் ரஜினி வில்லனாகவும் நடித்த நிலையில், இப்போ கமலை வில்லனாகவும் ரஜினிகாந்தை ஹீரோவாகவும் போட்டு எடுக்கலாம் என்கிற ஐடியாவில் தான் படம் உருவாகி இருக்கும் என்கின்றனர். கமல்ஹாசன் பெயரில் உள்ள A எழுத்தின் ஃபான்ட்டும் வித்தியாசமாக இருக்கும் நிலையில், அவர் தான் Anti Heroi என ரசிகர்கள் கெஸ் செய்து வருகின்றனர். படம் வெளியாகும் போது 2 பேருமே ஹீரோவாக திரைகளை தீப்பிடிக்க வைக்கப் போவது உறுதி.

த்ரிஷா, நயன்தாரா: ஹீரோ பஞ்சாயத்தை விடுங்க முதல்ல இந்த படத்தில் ஹீரோயின் யாரு என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி உள்ளனர். ஹீரோயினே இல்லாமல் வயதான 2 டான் ஒரு சம்பவத்துக்காக தங்களது ஈகோவை விட்டு விட்டு களமிறங்கப் போகிறார்களா? அல்லது த்ரிஷா மற்றும் நயன்தாராவை ஜோடியாக நெல்சன் மாற்றப் போகிறாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. கமல்ஹாசன், ரஜினிகாந்த் போல ஹீரோயின்களில் டாப்பில் இருப்பவர்கள் நயன்தாரா மற்றும் த்ரிஷா தான் என்பதால் இந்த காம்போ அமைந்தால் வேறலெவலில் இருக்கும்.
சமீபத்தில், த்ரிஷா மற்றும் நயன்தாரா துபாயில் ஒன்றாக சந்தித்ததே இந்த படத்துக்காகத்தான் என்றும் கூறத் தொடங்கி உள்ளனர். கோலமாவு கோகிலா படத்துக்குப் பிறகு நயன்தாரா நெல்சன் இயக்கத்தில் நடித்தால் பட்டாசாக இருக்கும். கமலுடன் இதுவரை அவர் இணைந்து நடிக்காத நிலையில், நெல்சன் அந்த மேஜிக்கையும் நிகழ்த்துவாரா? என்பதை பார்ப்போம். ரெட் ஜெயன்ட் தயாரிப்பில் த்ரிஷா நடிப்பாரா? என ஏகப்பட்ட கேள்விகள் கிளம்பி உள்ளன. எப்படி இருந்தாலும் இந்த படம் ஆரம்பிக்கவே அடுத்த ஆண்டு ஆகிவிடும் என்பதால் அடுத்த அப்டேட் வரும் வரை காத்திருப்போம்.


Click it and Unblock the Notifications











