Samantha: மனசே கல்லா போச்சு.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சமந்தா!

சென்னை: நாக சைதன்யா, சமந்தா நடித்த ''யே மாயா சேசாவே'' படம் திரையரங்குகளில் ரீ ரிலீசாக இருக்கும் நிலையில், படத்தின் புரமோஷனில் நாக சைதன்யாவுடன் சமந்தா கலந்துகொள்ள உள்ளதாக இணையத்தில் பரவிய வதந்திக்கு, சமந்தா சரியான பதிலடி கொடுத்து வதந்திக்கு முற்றுப்புள்ளிவைத்துள்ளார்.

நாக சைதன்யாவும் சமந்தாவும்,''யே மாயா சேசாவே'' என்ற படத்தில் நடித்த போது தான் காதல் வயப்பட்டனர். அந்த படத்திற்கு பின் சமந்தா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிப்படத்திலும் அடுத்தடுத்து வெற்றியை கொடுத்து வந்தார். இதன் பின் இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். சமந்தா கிறிஸ்துவர் என்பதால், கிறிஸ்து முறைப்படியும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் சமந்தா தொடர்ந்து நடித்து வந்தார். பலரின் கண்படும் ஜோடியாக வாழ்த்து வந்த இவர்களின் வாழ்க்கையில் திடீரென புயல் ஏற்பட்டு இரண்டு பேரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

Samantha Naga Chaitanya Ye Maaya Chesave
Photo Credit:

நடிகை சமந்தா: விவாகரத்திற்கு பின் தொடர்ந்து நடித்து வந்த சமந்தா, உடல் நல பிரச்சனை காரணமாக எந்த படத்திலும் கமிட்டாகாமல் ஓய்வில் இருக்கிறார். தற்போது, சமந்தா சொந்தமாக 'டிராலாலா மூவிங் பிக்சர்ஸ்' என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இதன் மூலம் 'சுபம்' என்ற தலைப்பில் ஒரு படத்தை தயாரித்துள்ளார். அந்த படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது. அதே நேரம் நாக சைத்தன்யா, சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொண்டார். படத்தில் கவனம் செலுத்தி நடித்து வரும் நாக சைத்தன்யாவின் நடிப்பில் அண்மையில் தண்டேல் திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது.

ரீ ரிலீஸ்: இந்நிலையில், நாக சைதன்யா, சமந்தா நடித்த ''யே மாயா சேசாவே'' ஜூலை 18-ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீசாக உள்ளது. அதற்காக படத்தை ப்ரோமோஷன் வேலையை படக்குழு தொடங்கி உள்ளதால், படத்தின் புரமோஷனில் நாக சைதன்யாவுடன் சமந்தாவும் கலந்து கொள்ள உள்ளதாக வதந்தி பரவி வருகிறது. இந்த வதந்தியால் கடுப்பான சமந்தா, இல்லை, நான் யாருடனும் ''யே மாயா சேசாவே'' படத்தின் விளம்பரத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை. அந்த படத்தை விளம்பரப்படுத்தவும் விருப்பவில்லை. இந்தப் பேச்சு எங்கிருந்து வருகிறது என்றே தெரியவில்லை. தயவு செய்து தேவையில்லாத வதந்திகளை பரப்பாதீங்க என்று வதந்திக்கு முற்றுப்புள்ளிவைத்துள்ளார். இந்த செய்தியை பார்த்த சமந்தாவின் தீவிர ரசிகர்கள் அவரின் மனசே கல்லா போச்சு, இதுல எதுக்கு இப்படி ஒரு வதந்தியை பரப்பி அவங்களை நோகடித்து வருகிறீர்கள் என கேட்டு வருகின்றனர்.

இயக்குநருடன் காதலா: நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைத்தன்யா, இரண்டாவது திருமணம் செய்து கொண்ட போதும், சமந்தா இதுவரை யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், 'தி ஃபேமிலி மேன்', 'சிட்டாடெல்' உள்ளிட்ட வெப் தொடரை இயக்கிய ராஜநிடி மோரு உடன் அடிக்கடி வெளியில் சுற்றி வருகிறார். இருவரும் சேர்ந்து திருப்பதி கோவிலில் ஒன்றாக சாமி தரிசனம் செய்தனர். அதே போல, இன்ஸ்டாகிராமில் ராஜநிடி மோருன் விமானத்தில் இருக்கும் போட்டோவை பகிர்ந்து இருந்தார். இதனால். அவர் தான் சமந்தாவின் அடுத்த கணவர் என்று இணையத்தில் பேச்சு எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X