த்ரிஷாவின் நீண்ட கால ஆசையை நிறைவேற்றி வைப்பாரா கார்த்திக் சுப்பராஜ்?
Recommended Video

சென்னை: நடிகை த்ரிஷாவின் நீண்ட கால ஆசையை கார்த்திக் சுப்பராஜ் நிறைவேற்றி வைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
த்ரிஷா நடிக்க வந்து பல ஆண்டுகளாகிவிட்டது. தொடர்ந்து ஹீரோயினாக நடிக்கும் அவர் சீனியர், இளம் நடிகர்களுடன் நடித்து விட்டார். உலக நாயகன் கமல் ஹாஸனுடன் நடித்த த்ரிஷாவுக்கு ஒரேயொரு குறை தான். அது ரஜினியுடன் நடிக்காதது தான்.
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பதே த்ரிஷாவின் நீண்ட கால ஆசை.

ஆசை
ரஜினி சாருடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்க விரும்புகிறேன் என்று த்ரிஷாவும் நேரம் கிடைக்கும்போது எல்லாம் தனது ஆசையை வெளிப்படுத்துகிறார். ஆனால் அவரின் ஆசை இதுவரை நிறைவேறவில்லை.

ரஜினி
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் படத்திலாவது த்ரிஷாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. த்ரிஷாவின் ஆசை இந்த ஆண்டாவது நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அனுஷ்கா
கார்த்திக் சுப்பராஜ் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வைக்க நயன்தாரா, அனுஷ்கா, த்ரிஷா ஆகியோரை பரிசீலிக்கிறார்களாம். நயன்தாரா, அனுஷ்கா போட்டியில் இருப்பதால் த்ரிஷாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ராதிகா ஆப்தே
கோலிவுட்டுக்கு பதிலாக பாலிவுட்டில் இருந்து ராதிகா ஆப்தே, தீபிகா, கங்கனா ரனாவத் ஆகியோரில் யாரையாவது நடிக்க வைக்கலாமா என்ற யோசனையிலும் உள்ளார்களாம்.


Click it and Unblock the Notifications











