வரலட்சுமியால் கீர்த்திக்கு நடந்தது சாய் பல்லவிக்கும் நடக்குமா?

By Siva

சென்னை: சண்டக்கோழி 2, சர்கார் போன்று மாரி 2 படத்தில் ஹீரோயினை தூக்கி சாப்பிட்டுவிடுவாரா வரலட்சுமி சரத்குமார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள மாரி 2 படம் நாளை மறுநாள் வெளியாகிறது. பல படங்கள் அதே நாளில் ரிலீஸானாலும் தன் படத்தையும் அதே நாளில் வெளியிடுவதற்கு காரணம் உண்டு என்று தெரிவித்துள்ளார் தனுஷ்.

இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார் வெயிட்டான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மாரி 2

மாரி 2

சண்டக் கோழி 2, சர்கார் ஆகிய படங்களில் வில்லியாக நடித்த வரலட்சுமி தனது அருமையான நடிப்பால் ஹீரோயின் கீர்த்தி சுரேஷை ஓவர்டேக் செய்து அனைவரையும் தன்னை பற்றியே பேச வைத்தார். இந்நிலையில் மாரி 2 படத்திலும் அப்படி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வரலட்சுமி

வரலட்சுமி

வரலட்சுமி போன்றே தனது நடிப்பால் தன்னை பற்றி பேச வைத்தவர் சாய் பல்லவி. அதனால் மாரி 2 படத்தில் சாய் பல்லவிக்கும், வரலட்சுமிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் சேர்ந்து எந்த காட்சியிலும் நடிக்காவிட்டாலும் அவரவர் காட்சிகளில் அசத்தியிருப்பார்கள் என்று நம்பலாம்.

காதல்

காதல்

மாரி 2 படத்தில் தனுஷை துரத்தி துரத்தி காதலிக்கும் பெண்ணாக நடித்துள்ளார் சாய் பல்லவி. ஒரு வேளை அவருக்கு புதிய கீதை மீரா ஜாஸ்மீன் போன்று லூசு கதாபாத்திரமாக இருக்குமோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. நச்சுன்னு நடிக்கும் மீரா ஜாஸ்மீனையே புதிய கீதையில் லூசாக்கிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ்

தனுஷ்

தனுஷ் எப்படி நடிப்பார் என்று நம் அனைவருக்கும் தெரியும். அசால்டா நடித்து கைதட்டல்களை பெற்றுவிடுவார். அவர் ஹீரோவாக நடித்துள்ள படத்தில் வரலட்சுமி, சாய் பல்லவி எப்படி ரசிகர்களை கவரப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X