Kiran: மறைப்பதற்கு எதுவும் இல்லை.. நீச்சல் குளத்தில் தாறுமாறு கவர்ச்சி காட்டிய கிரண்!

சென்னை: ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை கிரண் ரத்தோர். தற்போது கவர்ச்சி புயலாக மாறி, இணையத்தில் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். தற்போது இவர், இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கும் நீச்சல் குள வீடியோ, முகம் சுளிக்கும் வகையில் இருப்பதால் பலரும் கிரணை திட்டி தீர்த்து வருகின்றனர்.

இயக்குனர் சரண் இயக்கிய ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை கிரண். அந்த திரைப்படத்தில் அம்சமான அழகுடன் படத்திற்கு ஏற்ப நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அந்த படத்தை தொடர்ந்து கமலஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்துடன் வின்னர், விஜயகாந்துடன் தென்னவன் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து பெயரெடுத்தார் கிரண்.

kiran rathod photos
Photo Credit:

நடிகை கிரண் ரத்தோர்: ஒரு கட்டத்தில் இவருக்கு பட வாய்ப்பு குறைந்ததை அடுத்து, கவர்ச்சியாக ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடினார். மேலும், எஸ்.ஜே.சூர்யாவின் நியூ படத்தில் மாமி கதாபாத்திரத்தில் நடித்து, டபுள் மீனிங்கில் வசனமும் பேசி, படத்தில் கவர்ச்சியில் எல்லை மீறி நடித்திருந்தார் கிரண். அந்தப் படத்திற்கு பிறகு அவருக்கு பெரிதாக எந்த வாய்ப்பும் வராததால் தொடர்ந்து வாய்ப்பு தேடி வந்த கிரணுக்கு விஷால் நடித்த ஆம்பள படத்தில், ஆன்ட்டி கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. அந்த கதாபாத்திரத்திலும் கவர்ச்சியை தூக்கலாக காட்டி நடித்திருந்தார். தற்போது, கிரண், வனிதா விஜயகுமார் இயக்கி உள்ள மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் நடித்துள்ளார். இத்திலைப்படம் ஜூலை 4ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.

நீச்சல் குளத்தில் கிரண்: தற்போது, கிரணுக்கு பட வாய்ப்பு எதுவும் இல்லாததால் instagram பக்கத்தில் கவர்ச்சி வீடியோக்களையும், கவர்ச்சி போட்டோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார், ஒரு சில நேரங்களில் இவரின் கவர்ச்சி எல்லை மீறி போக, அது ஆபாசமாக மாறி பேசுபொருளாகி விடுவதால், பல ரசிகர்கள் இவரை திட்டி வருகின்றனர். தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் குளிப்பது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த பலர், பட வாய்ப்புக்காக இப்படியா என்றும் பணத்திற்காக இப்படி எல்லாம் செய்யலாமா என கேட்டு வருகின்றனர். ஆனால், ஒரு சில ரசிகர்கள் கிரணின் அழகை வர்ணித்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.

படுக்கைக்கு அழைத்தனர்: நடிகை கிரண் அண்மையில், ஷாகிலாவிற்கு பேட்டி அளித்திருந்தார். அதில், நான் கொரோனா காலத்தில் பணத்திற்காக மிகவும் சிரமப்பட்டேன். கையில் இருந்த அனைத்து பணமும் தீர்ந்து போய் விட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். அதனால், என்னுடைய நண்பர்கள் குழுவில் கடனாக பணம் கிடைக்குமா என கேட்டேன். அதில், சிலர் நாங்கள் பணம் தருகிறோம், அதற்கு பதிலாக என்ன தருவாய் என்று கேட்டார்கள், அவர்களின் கேட்பதில் இரண்டு அர்த்தம் இருப்பது கூட எனக்கு தெரியாமல், பணம் வந்ததும் திருப்பி தந்து விடுகிறேன் என்று நான் பதில் அளித்திருந்தேன். ஆனால், அவர்களோ எங்களுக்கு பணம் எல்லாம் வேண்டாம், அதற்கு பதிலாக வேறு ஒன்று வேண்டும் என்று என்னை படுக்கைக்கு அழைத்தார்கள் என மனம் நொந்து பேசி இருந்தார் நடிகை கிரண் ரத்தோர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X