வித்யா பாலனின் ஆஸ்கர் கனவு!
மும்பை: பத்மஸ்ரீ விருது கிடைத்தது போல, எனக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் நாளும் தொலைவில் இல்லை என்கிறார் நடிகை வித்யாபாலன்.
ஆஸ்திரேலிய தலைநகர் மெல்போர்னில் வரும் மே மாதம் 1-ம் தேதி முதல் 11 வரை நடைபெறவுள்ள இந்திய திரைப்பட விழாவுக்கான படங்களை தேர்வு செய்யும் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது.
இவ்விழாவுக்கான இந்திய திரைப்பட உலகின் தூதராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை வித்யா பாலன் திரைப்பட விழாவில் பங்கேற்கும் இந்திய படங்களின் பெயர்களை இந்நிகழ்ச்சியில் அறிவித்தார்.

பேட்டி
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வித்யா பாலன், ‘எனது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஷாதி கே சைட் எஃபெக்ட்ஸ்' படத்துக்கு ரசிகர்கள் அளித்துள்ள வரவேற்பு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. ஆரம்பம் முதல் ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பு பிரமிக்கத்தக்கது.

பத்மஸ்ரீ
ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடிப்பதையே நான் விரும்புகிறேன். ஆஸ்கார் விருதை வாங்க வேண்டும் என்று நான் நினைத்துப் பார்த்ததே கிடையாது. அதேபோல், பத்மஸ்ரீ விருது வாங்குவேன் என்றும் நினைத்துப் பார்த்ததே கிடையாது.

ஆஸ்கரும் கிடைக்கும்
ஆனால், கடவுளின் தயவால் பத்மஸ்ரீ விருது எனக்கு கிடைத்தது. இதேபோல், ஆஸ்கார் விருது வாங்கும் நாளும் இன்னும் அதிக தூரத்தில் இல்லை' என்றார்.

நோ பாலிடிக்ஸ்
அரசியலில் இறங்கும் நோக்கம் ஏதும் உள்ளதா? என்று கேட்டபோது, 'அப்படி எந்தத் திட்டமும் இல்லை," என்றார்.


Click it and Unblock the Notifications











