twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நயன்தாராவுக்கு முன்பே அதை செய்த பிரியாமணி:ஆனா எதிர்பார்த்தது நடக்கலயே

    |

    சென்னை: தற்போது கதாநாயகியை மையப்படுத்தும் சினிமாவை நோக்கி நகர்கிறது திரையுலகம்.

    சமீப காலங்களாக கதாநாயகியை மையப்படுத்தும் சினிமாக்கள் வரத்தொடங்கியுள்ளன.

    பெண்கள் முன்னேற்றம், பெண் உரிமை என கவிதையில் கத்தி தீட்டிய மகாகவி பாரதியாரின் நினைவு நாளில் தற்போதைய சினிமாவில் பெண்களின் பங்களிப்பை அசைபோடலாம்.

    கதாநாயகி என்றால், கதாநாயகனை வீட்டுக்குத் தெரியாமல் காதலிக்க வேண்டும், மரத்தைச் சுற்றி டூயட் பாடவேண்டும் என்ற காலம் மலையேறிப்போய் இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் வந்துவிட்டன.

    சாருலதா

    சாருலதா

    சமீபகாலங்களில் கதாநாயகியை மையப்படுத்தி பல வெற்றிப்படங்கள் வந்துள்ளன. சமீபத்திய கதாநாயகிகளில் இந்த முயற்சியை முதலில் எடுத்தவர் என்றால் அது பிரியாமணி தான். நன்றாக நடிக்கக் கூடிய நடிகையாக இருந்தாலும், அவர் இரட்டை வேடத்தில் நடித்த சாருலதா எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை.

    ஜோதிகா

    ஜோதிகா

    துரு துரு புன்னகையுடன் கோலிவுட்டில் அறிமுகமான நடிகை ஜோதிகா திருமணத்திற்கு பிறகு, கொஞ்சம் இடைவெளி விட்டு நடித்த படம் 36 வயதினிலே. ஜோதிகா பொறுப்பான நடிகை என்பதை உணர்த்தியது. ஆரம்ப காலங்களில் ரசித்த அதே ரசிகர்கள் இன்னும் கூடுதல் அக்கறையோடு படம் பார்த்து வணிக ரீதியாக வெற்றிபெறச் செய்தனர். மீண்டும் காற்றின் மொழி வாயிலாக வரவுள்ளார்.

    லேடி சூப்பர் ஸ்டார்

    லேடி சூப்பர் ஸ்டார்

    கதாநாயகியை மையப்படுத்தி வரும் படங்களில் முக்கியமானவர் நயன்தாரா. மாயா திரைப்பட வெற்றியைத் தொடர்ந்து ஆழ்துளாய்க் கிணறு, தண்ணீர் பஞ்சம் பிரச்சனைகளின் ஆணிவேரைப் பேசிய படமாக அறம் கிடைத்தது. இப்போதுள்ள நாயகிகளில் நயன்தாராவைத் தவிற வேறு யாரும் அதைச் செய்ய முடியுமா என யோசிக்க முடியவில்லை. அதேபோல் கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் என அடுத்தடுத்து தனி ஒருவராக வெற்றியைக் கொடுக்கிறார் லேடி சூப்பர் ஸ்டார்.

    ஐஸ்வர்யா ராஜேஷ்

    ஐஸ்வர்யா ராஜேஷ்

    அந்த வரிசையில் இப்போது களமிறங்கியிருப்பவர் சமந்தா. யூடர்ன் திரைப்படத்தின் மூலம் கலக்க உள்ளார். படத்தின் ட்ரெயிலர், புரமோ பாடல்களைப் பார்க்கும் போது நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை எழுகிறது. அதேபோல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் மற்றொரு படம் ஐஸ்வர்யா ராஜேஷின் கனா. சிவகார்த்திக்கேயனின் முதல் தயாரிப்பான இப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார்.

    த்ரிஷா

    த்ரிஷா

    பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது அமலா பாலின் ஆடை. மேயாத மான் திரைப்பட இயக்குனர் ரத்ன குமார் இப்படத்தை இயக்குகிறார். மேலும், அதோ அந்த பறவைப் போல என்ற படத்திலும் அமலா பால் நடித்து வருகிறார். அதேபோல், த்ரிஷா நடிப்பில் வெளிவந்த மோகினி திரைப்படமும் கதாநாயகியை மையப்படுத்திய படம்தான் என்றாலும், அது எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்க வில்லை.

    English summary
    The past few years have seen a healthy women centric films like Maya, Aramm, 36 Vayathinile, Kolamavu Kokila and more.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X