ஆண்களால் எனக்கு ஒன்றுமில்லை, என்னால் தான் ஆண்களுக்கு பாதிப்பு: சனா கான்
சென்னை: பட வாய்ப்புக்காக யாருடனும் செக்ஸ் உடன்பாடு வைத்துக்கொள்ள மாட்டேன் என்று நடிகை சனா கான் தெரிவித்துள்ளார்.
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து நடிகையின் டைரி என்ற படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் சில்க்காக சனா கான் நடித்து வருகிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
அதன் பிறகு சனா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு,

இன்டர்நெட்டில் சில்க்கைப் பார்த்தேன்
சில்க் ஸ்மிதாவாக நடிக்க ஒப்புக் கொண்டவுடன் இன்டர்நெட்டில் அவர் நடித்த படங்களை பார்த்தேன். அவருடைய நடை, உடை, பாவனைகளை பார்த்து தெரிந்து கொண்டேன் என்றார் சனா.

சில்க் மரணம் திரையுலகிற்கு பெரிய இழப்பு
சில்க் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்கிறார்கள். சிலர் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், சிலர் அவர் கொல்லப்பட்டதாகவும் கூறுகின்றனர். சில்க்கின் மரணம் திரையுலகிற்கு ஏற்பட்ட பெரிய இழப்பு ஆகும் என்றார் சனா 'சில்க்' கான்.

என்னால் தான் ஆண்களுக்கு பாதிப்பு
நான் தைரியமானவள். சொந்த காலில் நிற்க எனக்கு தெரியும். எந்த ஆணாலும் என்னை விரக்தி அடைய வைக்க முடியாது. என்னால் தான் ஆண்கள் பாதிக்கப்படுவார்கள். ஆண்களால் நான் பாதிக்கப்பட மாட்டேன் என்று கூறினார் சனா.

வாய்ப்புக்காக செக்ஸ் கிடையாது
செக்ஸ் உடன்பாடு வைத்தால் தான் பட வாய்ப்புகள் பெற முடியும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது அவரவர் தனிப்பட்ட எண்ணம். எனக்கு அது நடக்கவில்லை. நான் உறுதியானவள். எந்த சூழலிலும் யாருடனும் சமரசம் செய்ய மாட்டேன் என்று கராராக தெரிவித்தார் சனா.

சில்க் ஆவி என்னை மிரட்டாது, பாராட்டும்
சில்க் ஆவி என்னை மிரட்டாது. மாறாக என் கதாபாத்திரத்தில் நன்றாக நடிக்கிறாய் என்று பாராட்டும். என் கதாபாத்திரத்தில் நீ நடிப்பதற்காக பெருமைப்படுகிறேன் என்று கூறும் என சனா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











