ஒருத்தி எத்தனை பேரைத் தான் காதலிக்கிறது? சீறும் பூர்ணா
சென்னை: என்னை இன்னும் எத்தனை ஹீரோக்களுடன் சேர்த்து வைத்து பேசுவார்களோ தெரியவில்லை என்று நடிகை பூர்ணா தெரிவித்துள்ளார்.
நடிகை பூர்ணா தன்னைப் பற்றி வரும் காதல் கிசுகிசுக்கலால் கோபமாக உள்ளார்.

முதலில் நகுலுடன் காதல்
கந்தகோட்டை படத்தில் நடித்தபோது பூர்ணாவுக்கும் நகுலுக்கும் காதல் தீ பற்றிக் கொண்டது என்று பேச்சு அடிபட்டது.

அடுத்து ஆதியுடன் லவ்
ஆடு புலி படத்தில் ஆதியுடன் ஜோடி சேர்ந்தார் பூர்ணா. அப்போது அவர்களுக்குள் லவ்வாகிவிட்டது என்று கிசுகிசுத்தனர்.

மலையாள ஹீரோவுடன் காதல்
மலையாள படமான சட்டக்காரியில் நடிக்கையில் ஹீரோ ஹேமந்த் மேனனுக்கும், பூர்ணாவுக்கும் இடையே காதல் என்று பேசப்பட்டது.

எத்தனை பேரைத் தான் காதலிக்கிறது
நான் நடிக்கும் பட ஹீரோக்களுடன் எல்லாம் காதல் என்கிறார்கள். ஒருத்தி எத்தனை பேரைத் தான் காதலிப்பது என்று சீறுகிறார் பூர்ணா.


Click it and Unblock the Notifications











