செம ஸ்பீட்.. 150 முடிச்சுட்டேன்.. அடுத்த டார்கெட் 200 தான்.. சும்மா தெறிக்கவிடும் கீர்த்தி சுரேஷ்!

சென்னை: ஒரே டேக்கில் நடிக்க மட்டுமல்ல, 150 சூர்ய நமஸ்காரத்தையும் தன்னால் செய்து காட்ட முடியும் என நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டு இருக்கும் செம ஸ்பீட் வொர்க்கவுட் வீடியோ வேற லெவலில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

தனது பெண்குயின் படத்தை ஒடிடியில் வெளியிட்டு இருந்த நிலையில், இவரது இன்னும் இரு படங்கள் ஒடிடி ரிலீசுக்கு தயாராகி விட்டன.

செம ஜோடி

செம ஜோடி

விக்ரம் பிரபுவுடன் இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் கோலிவுட்டில் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரெமோ படத்தில் செம பப்ளியாக நடித்து இளைஞர்களை கொள்ளையடித்தார். சீமராஜா படத்திலும் ராஜா சிவகார்த்திகேயனுக்கு ராணியாக நடித்திருந்தார்.

வயலின் வாசித்து அசத்தல்

வயலின் வாசித்து அசத்தல்

தளபதி விஜய்யுடன் பைரவா, சர்கார் என இரு படங்களில் ஜோடி போட்டு நடித்து அசத்திய நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, விஜய்க்காக ஸ்பெஷலாக வயலினில் மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடலை வாசித்து பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தார்.

டாக் லவ்

டாக் லவ்

சர்வதேச நாய்கள் தினத்தை முன்னிட்டு சமீபத்தில் தனது செல்ல நாய்க்குட்டிகளுடன் இருக்கும் க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த லாக்டவுன் காலத்திலும் அவ்வப்போது, காத்தாடி விடுவது, ஒர்க்கவுட் செய்வது என ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்து வருகிறார்.

திருமண நாள்

திருமண நாள்

சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நெற்றிக்கண் படத்தில் நடித்த நடிகை மேனகா தான் கீர்த்தி சுரேஷின் அம்மா என்பது பலருக்கும் தெரிந்த விஷயம். நேற்று இயக்குநர் சுரேஷ் குமாருக்கும் நடிகை மேனகாவுக்கும் திருமண நாள் என போட்டோ போட்டு மகள் கீர்த்தி சுரேஷ் வாழ்த்தி இருந்தது ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

150 சூர்ய நமஸ்காரம்

150 சூர்ய நமஸ்காரம்

நடிகையர் திலகம் சாவித்ரியாகவே நடித்து தேசிய விருதை தட்டிச் சென்ற கீர்த்தி சுரேஷ், இப்போ 150 சூர்ய நமஸ்காரங்களை ஒரே நாளில் செய்து அசத்திய மின்னல் வேக வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி உள்ளார். இவ்ளோ வேகமாக ஒர்க்கவுட் செய்து தான் உடல் எடையை அப்படிக் குறைத்தாரோ என ரசிகர்கள் வாய் பிளக்கின்றனர்.

அடுத்தது 200

அடுத்தது 200

மேலும், அந்த வீடியோவுக்கு கொடுக்கப்பட்டுள்ள கேப்ஷனில் தனது அடுத்த இலக்கு 200 சூர்ய நமஸ்காரங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இப்படி நூற்றுக்கணக்கான சூர்ய நமஸ்காரங்களை செய்வதால், உடம்பில் உள்ள அத்தனை சக்கரங்களும் புத்துணர்வு பெறும் என்றும் அந்த உணர்வை வாயால சொல்ல முடியாது அனுபவிக்கணும் என போட்டு மற்ற பிரபலங்களையும் உசுப்பி விட்டுள்ளார்.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் தயாரிப்பில் அமேசான் பிரைமில் வெளியான கீர்த்தி சுரேஷின் பெண்குயின் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான குட் லக் சகி மற்றும் மிஸ் இந்தியா உள்ளிட்ட படங்கள் விரைவில் ஒடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கின்றன.

பெரிய படங்கள்

பெரிய படங்கள்

மோகன் லால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள மரக்காயர் அரபிக் கடலின் சிங்கம் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த உள்ளிட்ட பெரிய படங்கள் நிச்சயம் தியேட்டரில் தான் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷின் போர்ஷன் இன்னும் முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X