திரிஷாவின் கன்னடத்து 'ரம்'!
சென்னை: கோலிவுட் திரிஷா அடுத்து சான்டல்வுட்டுக்குக் கிளம்புகிறார் - அதாவது கன்னடத்தில் நடிக்கப் போகிறார். படத்திற்கு ரம் என்று படா கிக்காக பெயர் சூட்டியுள்ளனர்.
தமிழில் நடித்துள்ளார், தெலுங்கில் கலக்கியுள்ளார். இரண்டிலும் ஒரே சமயத்தில் வெற்றிகரமாக இரட்டை குதிரை சவாரியும் அடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது கன்னடத்திற்கும் கிளம்பியுள்ளார் திரிஷா.
வர்ஷம் படத்தை இயக்கிய இயக்குநர் எம்.ஏ.ராஜூதான் கன்னடத்திற்கு திரிஷாவைக் கூட்டிச் செல்கிறார்.

ரம்
படத்திற்கு படு கிக்காக ரம் என்று பெயர் சூட்டியுள்ளனர். பெங்களூர் சினிமாவாச்சே, பிறகு இப்படித்தானே பெயர் சூட்ட வேண்டும்.

அது ஏன் அப்படி ஒரு பெயர்...
ரம் என்றால் குடிக்கும் ரம் இல்லையாம். மாறாக, ரம்பா, ஊர்வசி, மேனகா ஆகிய பெயர்களின் ஆங்கில முதல் எழுத்துக்களைக் கூட்டி வரும் பெயர்தான் ரம்மாம்.

மூன்று மொழிகளிலும்..
இப்படத்தை கன்னடத்தில் மட்டும் இயக்கவில்லை ராஜு. மாறாக தமிழ், தெலுங்கிலும் கூட இதை கொண்டு வருகிறாராம். அதாவது டப் செய்யப் போகிறாராம்.

கதை என்ன ராசா...
படத்தின் கதை என்ன என்று தெரியவில்லை. ஆனால் திரிஷா, ரம் என்று இருப்பதைப் பார்த்தால் படு கிக்கான மேட்டராகத்தான் படம் இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கூட்டிக் கழிச்சுப் பாருங்க, ஏதாச்சும் புரியும்...!


Click it and Unblock the Notifications











