»   »  நோ கும்மாங்குத்து- யானா இனிமேல் குத்துப் பாட்டுக்கு ஆட மாட்டேன், நடிக்கும் வாய்ப்புடன் கூடிய படங்களை மட்டுமே ஒத்துக் கொள்ளப் போகிறேன்என கும்மாங்குத்து நாயகி யானா குப்தா அதிரடியாக அறிவித்துள்ளார்.யானாவின் ஒரிஜினல் பெயர் யானா சின்க்கோவா.. பிறந்தது செக்கோஸ்லோவாக்கியா. (இப்போது செக் குடியரசு). சத்யா குப்தாஎன்ற இந்தியரை மணந்து கொண்ட பின்னர் தனது பெயரை யானா குப்தாவாக்கிக் கொண்டு குபால் என இந்திய மாடலிங் உலகில்வந்து குதித்தார்.லிஸா ரேவுக்கு ஒரு மாற்று தேடிக் கொண்டிருந்த லக்மே நிறுவனம் இவரை வளைத்துப் போட்டது. அந் நிறுவனத்தின் அழகுப்பொருட்களுக்கு மாடலாக இருந்து கொண்டே பாலிவுட்டில் சான்ஸ் தேடி வலை வீசினார் யானா. வீழ்ந்தன பெரிய மீன்கள். அடித்தது சினிமா சான்ஸ். திருமணமானவர் என்றாலும் இவர் காட்டிய கவர்ச்சிக்கு பாலிவுட்டில்தீப்பிடித்துக் கொண்டது. அதிலிருந்து யானா கிறக்கம் இன்னும் அங்கு குறைந்தபாடில்லை.இந் நிலையில் தான் மன்மதன் படம் மூலம் யானாவை தமிழுக்கும் கூட்டி வந்து கலைச் சேவை புரிந்தார் சிம்பு.மன்மதனில் யானா போட்ட குத்தாட்டத்தால் குஷியாகிப் போனார்கள் ரசிகர்கள். யானாவுக்குக் கிடைத்த அமோக ஆதரவைப் பார்த்த தமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள் பொட்டியைத் தூக்கிக் கொண்டு யானாவிடம் ஓடினார்கள். ஆனால் அவர் எல்லாப் படத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்நியனில் மட்டும் விக்ரடன் அம்சமாக ஆட்டம் போட்டார்.அதற்குப் பிறகு யானாவை ஆளைக் காணோம்.என்னடாவென்று விசாரித்துப் பார்த்தால், அம்மணி படு தீவிரமாக இந்தி படித்து வருகிறாராம். எதற்காம்? அதை யானாவே கூறுகிறார் கேளுங்கள்.குத்துப் பாட்டுக்கு ஆட்டம் போடுவது எனது இலக்கல்ல. இந்தியில் நல்ல கேரக்டர்களில் நடித்து நல்ல நடிகை என்ற பெயர்வாங்குவதே எனது லட்சியம். அதற்காகத்தான் இப்போது இந்தி படித்து வருகிறேன். கேரக்டருடன் கூடிய படங்களை மட்டுமே இனிமேல் ஒப்புக் கொள்ளப் போகிறேன். வெறும் கவர்ச்சியால் மட்டும் ரசிகர்களைக்கவருவது எனக்குப் பிடிக்கவில்லை.எனக்குள் நல்ல நடிகை இருக்கிறாள். அவள் வெளியே வரத் துடித்துக் கொண்டிருக்கிறாள். (ஐய்யோ) எனவே அவளுக்கேற்றதீனி கிடைக்கும்படியான கேரக்டரில் மட்டுமே இனிமேல் நடிப்பேன்.அதற்காக கிளாமரை விட்டு விட மாட்டேன். எனது உடல் வாகு கவர்ச்சிக்கு மட்டுமே லாயக்கு என்று சிலர் நினைத்து விட்டார்கள்.நடிகை என்று வந்து விட்டால் உடல் அழகு ரொம்ப முக்கியம். அதனால்தான் எனது உடல் அழகை ரொம்பவே மெனக்கெட்டுப்பராமரிக்கிறேன் என்கிறார்.யானாவின் மாடலிங் இந்தியாவோடு நின்றுவிடவில்லை. ஜப்பானிலும் பல பொருட்களுக்கு யானா தான் ஹாட் மாடல்.

நோ கும்மாங்குத்து- யானா இனிமேல் குத்துப் பாட்டுக்கு ஆட மாட்டேன், நடிக்கும் வாய்ப்புடன் கூடிய படங்களை மட்டுமே ஒத்துக் கொள்ளப் போகிறேன்என கும்மாங்குத்து நாயகி யானா குப்தா அதிரடியாக அறிவித்துள்ளார்.யானாவின் ஒரிஜினல் பெயர் யானா சின்க்கோவா.. பிறந்தது செக்கோஸ்லோவாக்கியா. (இப்போது செக் குடியரசு). சத்யா குப்தாஎன்ற இந்தியரை மணந்து கொண்ட பின்னர் தனது பெயரை யானா குப்தாவாக்கிக் கொண்டு குபால் என இந்திய மாடலிங் உலகில்வந்து குதித்தார்.லிஸா ரேவுக்கு ஒரு மாற்று தேடிக் கொண்டிருந்த லக்மே நிறுவனம் இவரை வளைத்துப் போட்டது. அந் நிறுவனத்தின் அழகுப்பொருட்களுக்கு மாடலாக இருந்து கொண்டே பாலிவுட்டில் சான்ஸ் தேடி வலை வீசினார் யானா. வீழ்ந்தன பெரிய மீன்கள். அடித்தது சினிமா சான்ஸ். திருமணமானவர் என்றாலும் இவர் காட்டிய கவர்ச்சிக்கு பாலிவுட்டில்தீப்பிடித்துக் கொண்டது. அதிலிருந்து யானா கிறக்கம் இன்னும் அங்கு குறைந்தபாடில்லை.இந் நிலையில் தான் மன்மதன் படம் மூலம் யானாவை தமிழுக்கும் கூட்டி வந்து கலைச் சேவை புரிந்தார் சிம்பு.மன்மதனில் யானா போட்ட குத்தாட்டத்தால் குஷியாகிப் போனார்கள் ரசிகர்கள். யானாவுக்குக் கிடைத்த அமோக ஆதரவைப் பார்த்த தமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள் பொட்டியைத் தூக்கிக் கொண்டு யானாவிடம் ஓடினார்கள். ஆனால் அவர் எல்லாப் படத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்நியனில் மட்டும் விக்ரடன் அம்சமாக ஆட்டம் போட்டார்.அதற்குப் பிறகு யானாவை ஆளைக் காணோம்.என்னடாவென்று விசாரித்துப் பார்த்தால், அம்மணி படு தீவிரமாக இந்தி படித்து வருகிறாராம். எதற்காம்? அதை யானாவே கூறுகிறார் கேளுங்கள்.குத்துப் பாட்டுக்கு ஆட்டம் போடுவது எனது இலக்கல்ல. இந்தியில் நல்ல கேரக்டர்களில் நடித்து நல்ல நடிகை என்ற பெயர்வாங்குவதே எனது லட்சியம். அதற்காகத்தான் இப்போது இந்தி படித்து வருகிறேன். கேரக்டருடன் கூடிய படங்களை மட்டுமே இனிமேல் ஒப்புக் கொள்ளப் போகிறேன். வெறும் கவர்ச்சியால் மட்டும் ரசிகர்களைக்கவருவது எனக்குப் பிடிக்கவில்லை.எனக்குள் நல்ல நடிகை இருக்கிறாள். அவள் வெளியே வரத் துடித்துக் கொண்டிருக்கிறாள். (ஐய்யோ) எனவே அவளுக்கேற்றதீனி கிடைக்கும்படியான கேரக்டரில் மட்டுமே இனிமேல் நடிப்பேன்.அதற்காக கிளாமரை விட்டு விட மாட்டேன். எனது உடல் வாகு கவர்ச்சிக்கு மட்டுமே லாயக்கு என்று சிலர் நினைத்து விட்டார்கள்.நடிகை என்று வந்து விட்டால் உடல் அழகு ரொம்ப முக்கியம். அதனால்தான் எனது உடல் அழகை ரொம்பவே மெனக்கெட்டுப்பராமரிக்கிறேன் என்கிறார்.யானாவின் மாடலிங் இந்தியாவோடு நின்றுவிடவில்லை. ஜப்பானிலும் பல பொருட்களுக்கு யானா தான் ஹாட் மாடல்.

Subscribe to Oneindia Tamil

இனிமேல் குத்துப் பாட்டுக்கு ஆட மாட்டேன், நடிக்கும் வாய்ப்புடன் கூடிய படங்களை மட்டுமே ஒத்துக் கொள்ளப் போகிறேன்என கும்மாங்குத்து நாயகி யானா குப்தா அதிரடியாக அறிவித்துள்ளார்.

யானாவின் ஒரிஜினல் பெயர் யானா சின்க்கோவா.. பிறந்தது செக்கோஸ்லோவாக்கியா. (இப்போது செக் குடியரசு). சத்யா குப்தாஎன்ற இந்தியரை மணந்து கொண்ட பின்னர் தனது பெயரை யானா குப்தாவாக்கிக் கொண்டு குபால் என இந்திய மாடலிங் உலகில்வந்து குதித்தார்.

லிஸா ரேவுக்கு ஒரு மாற்று தேடிக் கொண்டிருந்த லக்மே நிறுவனம் இவரை வளைத்துப் போட்டது. அந் நிறுவனத்தின் அழகுப்பொருட்களுக்கு மாடலாக இருந்து கொண்டே பாலிவுட்டில் சான்ஸ் தேடி வலை வீசினார் யானா.


வீழ்ந்தன பெரிய மீன்கள். அடித்தது சினிமா சான்ஸ். திருமணமானவர் என்றாலும் இவர் காட்டிய கவர்ச்சிக்கு பாலிவுட்டில்தீப்பிடித்துக் கொண்டது. அதிலிருந்து யானா கிறக்கம் இன்னும் அங்கு குறைந்தபாடில்லை.

இந் நிலையில் தான் மன்மதன் படம் மூலம் யானாவை தமிழுக்கும் கூட்டி வந்து கலைச் சேவை புரிந்தார் சிம்பு.

மன்மதனில் யானா போட்ட குத்தாட்டத்தால் குஷியாகிப் போனார்கள் ரசிகர்கள். யானாவுக்குக் கிடைத்த அமோக ஆதரவைப் பார்த்த தமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள் பொட்டியைத் தூக்கிக் கொண்டு யானாவிடம் ஓடினார்கள்.


ஆனால் அவர் எல்லாப் படத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்நியனில் மட்டும் விக்ரடன் அம்சமாக ஆட்டம் போட்டார்.அதற்குப் பிறகு யானாவை ஆளைக் காணோம்.

என்னடாவென்று விசாரித்துப் பார்த்தால், அம்மணி படு தீவிரமாக இந்தி படித்து வருகிறாராம். எதற்காம்? அதை யானாவே கூறுகிறார் கேளுங்கள்.

குத்துப் பாட்டுக்கு ஆட்டம் போடுவது எனது இலக்கல்ல. இந்தியில் நல்ல கேரக்டர்களில் நடித்து நல்ல நடிகை என்ற பெயர்வாங்குவதே எனது லட்சியம். அதற்காகத்தான் இப்போது இந்தி படித்து வருகிறேன்.


கேரக்டருடன் கூடிய படங்களை மட்டுமே இனிமேல் ஒப்புக் கொள்ளப் போகிறேன். வெறும் கவர்ச்சியால் மட்டும் ரசிகர்களைக்கவருவது எனக்குப் பிடிக்கவில்லை.

எனக்குள் நல்ல நடிகை இருக்கிறாள். அவள் வெளியே வரத் துடித்துக் கொண்டிருக்கிறாள். (ஐய்யோ) எனவே அவளுக்கேற்றதீனி கிடைக்கும்படியான கேரக்டரில் மட்டுமே இனிமேல் நடிப்பேன்.

அதற்காக கிளாமரை விட்டு விட மாட்டேன். எனது உடல் வாகு கவர்ச்சிக்கு மட்டுமே லாயக்கு என்று சிலர் நினைத்து விட்டார்கள்.நடிகை என்று வந்து விட்டால் உடல் அழகு ரொம்ப முக்கியம். அதனால்தான் எனது உடல் அழகை ரொம்பவே மெனக்கெட்டுப்பராமரிக்கிறேன் என்கிறார்.

யானாவின் மாடலிங் இந்தியாவோடு நின்றுவிடவில்லை. ஜப்பானிலும் பல பொருட்களுக்கு யானா தான் ஹாட் மாடல்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil