கியாரா அத்வானியோட புகுந்து விளையாடுறாரு யஷ்.. நயன்தாராவோட லுக் தான் செம.. டாக்ஸிக் பாட்டு செம!

சென்னை: கீது மோகன்தாஸ் இப்படியெல்லாம் இயக்குவாரா என டாக்ஸிக் படத்தின் ஒவ்வொரு காட்சிகள் வெளியாகும் போதும் ரசிகர்கள் உச்சகட்ட ஷாக் ஆகும் அளவுக்கே ஒவ்வொரு ஃபிரேமும் ஹை லெவல் ஹாட்னஸில் உள்ளது.

டாக்ஸிக் படத்தின் தபாஹி (Tabaahi) பாடல் வீடியோ தற்போது வெளியாகி ஒட்டுமொத்த யஷ் ரசிகர்களையும் வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. கேஜிஎஃப் படங்களில் எல்லாம் ஹீரோயினுடன் இந்தளவுக்கு நெருக்கமாக நடிக்காத யஷ் இந்த படத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானியை ஹார்லிக்ஸ் போல அப்படியே சாப்பிடுவேன் என்கிற கணக்காக சும்மா புகுந்து விளையாடிய காட்சிகளை பார்த்து எல்லாருமே ஸ்டன் ஆகி உள்ளனர்.

Yash and Kiara Advani Chemistry works like a fire in Tabaahi Song from Toxic Movie
Photo Credit:

மேலும், விக்னேஷ் சிவன் வரிகளில் உருவாகியுள்ள தபாஹி பாடலில் யஷ் திடீரென எழுந்து சென்றதும் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன் எல்லாம் வேறலெவலில் தியேட்டரில் தெறிக்கும் என்பது உறுதியாகி உள்ளது.

டாக்ஸிக் படத்தின் தபாஹி பாடல் ரிலீஸ்: கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் மற்றும் யஷ்ஷின் மான்ஸ்டர் மைண்ட் தயாரிப்பு நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள டாக்ஸிக் திரைப்படத்தின் தபாஹி பாடல் வீடியோ தற்போது வெளியாகி இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது. பான் இந்தியா படத்தைத் தாண்டி பான் வேர்ல்ட் படமாக இதை கீது மோகன்தாஸ் உருவாக்கியுள்ளார். கியாரா அத்வானியுடன் யஷ்ஷுக்கு இருக்கும் கெமிஸ்ட்ரி உச்சகட்டம் என ரசிகர்கள் வாயை பிளந்துள்ளனர்.

கிளாமரின் உச்சம் கியாரா அத்வானி: லஸ்ட் ஸ்டோரீஸில் தொடங்கி உச்சகட்ட கிளாமரில் நடிக்க கியாரா அத்வானிக்கு யாரும் கிளாஸ் எடுக்கத் தேவையில்லை. பிகினி உள்ளிட்ட ஏகப்பட்ட எக்ஸ்ட்ரா கவர்ச்சி ஏரியாக்களிலும் அவர் புகுந்து விளையாடி உள்ளார். இந்த பாடலின் தொடக்கத்திலேயே யஷ் கியாராவின் நெஞ்சில் முட்டி அவரை தூக்கி உட்கார வைப்பதில் தொடங்கி கடைசியாக இடுப்பில் கட்டிக் கொண்டு தூக்கிச் செல்வது வரை என எந்தவொரு சலனமுமில்லாமல் கியாரா அத்வானி நடித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் ஃபயர் விட்டு வருகின்றனர். பாடலிலேயே பல இடங்களில் சென்சார் செய்து வெளியிட்டதை போலவே தெரிகிறது. செருப்பைக் கழட்டி தொடைக்கு மேலே யஷ் கை செல்வது எல்லாம் எல்லை மீறல்.

படத்துல எவ்ளோ இருக்குமோ?: டாக்ஸிக் படத்தின் முதல் ப்ரோமோவில் தொடங்கி இப்போ வெளியாகி உள்ள தபாஹி பாடல் வரை கவர்ச்சி கொட்டிக் கிடக்கிறது. ஏ சான்றிதழ் உடன் 7 ஹீரோயின்கள் நடித்துள்ள இந்த படத்தில் மேலும், என்னவெல்லாம் கொட்டிக்கிடக்குது என்பதை பார்க்கவே ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். ரன்பீர் கபூரின் அனிமல் படத்தை விட டாக்ஸிக் படத்தில் அடல்ட் காட்சிகள் அதிகம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 26ம் தேதி வெளியாகவுள்ள டாக்ஸிக் திரைப்படம் வசூலில் துரந்தர் 2வுக்கு போட்டியாக இருக்குமா? என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X