ஜாம்பி படத்துக்கு அவார்டா.. ஆளவிடுங்கடா சாமி.. யாஷிகா ஆனந்தை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
சென்னை: கவர்ச்சி நடிகை யாஷிகா ஆனந்துக்கு எம்.ஜி.ஆர் - சிவாஜி விருது வழங்கப்பட்டுள்ளது. விருதுடன் எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட அவருக்கு பாராட்டுக்களுக்கு பதிலாக ட்ரோல்களே குவிகின்றன.
யாஷிகா ஆனந்த் கடந்த ஆண்டு நடித்த ஒரே படம் ஜாம்பி மட்டும் தான். அதெல்லாம் ஒரு படம் அந்த படத்தில் கிளாமராக அலைந்ததற்கெல்லாம் விருது கொடுக்குறாங்களா?
விருதுக்கு உண்டான மரியாதையே போயிடுச்சே என நெட்டிசன்கள் யாஷிகா ஆனந்தை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

மொக்கை படம்
புவன் ஆர். நல்லன் இயக்கத்தில் யோகி பாபு, யாஷிகா ஆனந்த், பரிதாபங்கள் கோபி, சுதாகர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஜாம்பி படம் படு தோல்வியை சந்தித்தது. அந்த படத்தில் ஷார்ட் ஜீன்ஸ் அணிந்து கொண்டு தொடையழகை காட்டியபடி நடிகை யாஷிகா நடித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு யாஷிகா நடிப்பில் வெளியான படம் இது தான்.
விருதுடன்
இந்நிலையில், ஜாம்பி படத்தில் நடித்ததற்காக யாஷிகா ஆனந்துக்கு எம்.ஜி.ஆர் - சிவாஜி விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த விருதுடன் எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் யாஷிகா பதிவிட்டு விருது கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஒரு நிமிஷம் தலையே சுத்திடுச்சு
ஜாம்பி படத்துக்கு அவார்டா.. ஒரு நிமிஷம் தலையே சுத்திடுச்சு என ரஜினிகாந்த் பேசிய வீடியோ ஜிஃபை போட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
சிறந்த நடிகை ஓகே.. ஆனா
யாஷிகா ஆனந்துக்கு சிறந்த நடிகை விருது ஓகே.. ஆனால் ஜாம்பி படத்துக்கு கொடுத்தீங்க பார்த்தீங்களா என இந்த யாஷிகா ரசிகரே கலாய்த்துள்ளார்.
என்னாது பெஸ்ட் ஆக்ட்ரஸா?
என்னாது பெஸ்ட் ஆக்ட்ரஸ் ஃபார் ஜாம்பியா? என இந்த ரசிகர் செம்ம கடுப்பாக கேட்டுள்ளார்.
ஆண்களின் கனவு கன்னி
தலைவி.. பல ஆண்களின் கனவு கன்னியே லவ்யூ தலைவி என இந்த ரசிகர் ஓவராக வழிந்துள்ளார்.
நடத்துங்க
ஜாம்பி படத்துக்கெல்லாம் அவார்டா நடத்துங்க என இந்த நெட்டிசன் நொந்து போய் கமெண்ட் செய்துள்ளார்.
விழாவுக்கு போனா விருது
இப்போ எல்லாம் விழாவுக்கு போனா விருது கொடுக்குற லெவலுக்கு விருதோட நிலைமை மோசமாகிடுச்சு என இந்த நெட்டிசன் கழுவி ஊற்றியுள்ளார்.
நாச்சியப்பன் பாத்திர கடை
நாச்சியப்பன் பாத்திர கடையில நீயே போய் விருது வாங்கிட்டியாம்மா என இந்த நெட்டிசன் கிண்டல் அடித்துள்ளார்.
நீ என்ன கழட்டிட்டன்னு
நீ என்ன கழட்டிட்டன்னு உனக்கு அவார்டு கொடுத்துருக்காங்க என இந்த நெட்டிசன் வச்சி விளாசியுள்ளார்.
ஆளை விடுடா சாமி
போதும் டா.. முடியல டா.. ஆளை விடுடா சாமி என்ற தொனியில் மீம் போட்டு இந்த நெட்டிசனும் யாஷிகாவை பங்கமாக கலாய்த்துள்ளார்.


Click it and Unblock the Notifications











