போஸ் கொடுக்குறேன்னு புண்ணாக்கிக்காதீங்க.. ஹீல்ஸ் கால யாஷிகா எங்க வச்சிருக்காருன்னு பாருங்க!
சென்னை: வெள்ளை நிற தேவதை போல அழகாக டிரெஸ் பண்ணிக்கிட்டு நடிகை யாஷிகா ஆனந்த் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
Recommended Video
லாக் டவுன் நேரத்தில் புதிய போட்டோஷூட் எடுக்க முடியாத நிலையில், த்ரோபேக் போட்டோக்களை நடிகைகள் பதிவிட்டு வருகின்றனர்.
சிலர், ஏற்கனவே எடுத்ததில் ரசிகர்கள் பார்வைக்கு வெளியிடாமல் வைத்திருந்த சில சூப்பர் போட்டோக்களையும் பதிவிட்டு கண்களுக்கு இந்த சம்மரில் குளிர்ச்சி ஊட்டி வருகின்றனர்.

ஒயிட் ஏஞ்சல்
வெள்ளை நிற தேவதை போல நடிகை யாஷிகா ஆனந்த் மேக்கப் செய்து போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சிட்னி சிலேடன் காஸ்ட்யூமில் யாஷிகா இருக்கும் இந்த புகைப்படத்தை மாடலிங் போட்டோகிராஃபர் வெங்கட்ராம் படம்பிடித்துள்ளார். பிரைட் ஓவர் நிறுவனம் மேக்கப் போட்டு இருக்கிறது.

கொக்குப் போல
கொக்குப் போல ஒற்றைக் காலை தூக்கி யாஷிகா ஆனந்த் கொடுத்துள்ள இந்த புகைப்படத்தில், செம அழகாகவும், ஹாட்டாகவும் நடிகை யாஷிகா ஆனந்த் மிளிர்கிறார். க்யூட் பேபி என்றும், லேடி பாஸ் இன் ஒயிட் என்றும் வேற லெவல் என்றும் ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்டுகளையும் குவித்து வருகின்றனர்.

குத்திக்கப் போகுது
ஹீல்ஸ் காலுடன் ஒற்றைக் காலை தூக்கி, இன்னொரு கால் மேல் ஒய்யாரமாக வைத்து யாஷிகா ஆனந்த் கொடுத்துள்ள போஸை பார்த்து சில நெட்டிசன்கள் பார்த்து மேடம் குத்திக்கப் போகுது என்றும், போஸ் கொடுக்குறேன்னு புண்ணாக்கிடாதீங்க என்றும் வழக்கம் போல ட்ரோல் செய்தும் வருகின்றனர்.

நட்புக்காக
கொரோனா கலவரத்தால் ரிலீசான கொஞ்ச நாட்களிலேயே தியேட்டரில் இருந்து தூக்கப்பட்ட ஹரிஷ் கல்யாணின் தாராள பிரபு திரைப்படம் அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஏற்பட்ட நட்பால், நடிகை யாஷிகா ஆனந்த், நட்புக்காக அந்த படத்திற்கு தனது சமூக வலைதள பக்கத்தில் விளம்பரப் படுத்தி வருகிறார்.

மகத்துடன்
இயக்குநர் கார்த்திக் நரேனின் அறிமுக படமான துருவங்கள் பதினாறு படத்தில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். ஜாம்பி படத்திற்கு பிறகு யாஷிகா நடிப்பில் எந்தவொரு புதுப்படமும் வெளியாகவில்லை. ஆரவ் நடிப்பில் உருவாகி உள்ள ராஜபீமா மற்றும் மகத் நடிப்பில் உருவாகியுள்ள இவன் தான் உத்தமன் என இரு படங்களின் ரிலீசுக்காக யாஷிகா காத்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











