சபாஷ் சரியான போட்டி.. இப்படியெல்லாம் பண்ண முடியுமா?.. ஷிவானிக்கு டஃப் கொடுத்த யாஷிகா ஆனந்த்!
சென்னை: நடிகைகள் லாஸ்லியா, ஷிவானி நாராயணன், ஷாலு ஷம்முவை தொடர்ந்து யாஷிகா ஆனந்தும் ஜிம்முக்கு சென்றுள்ளார். அங்கே கடுமையாக அவர் வொர்க்கவுட் செய்யும் வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் நடனமாடி ரீல்ஸ் போட்ட வீடியோவை எல்லாம் ரசிகர்கள் வர வர பார்ப்பது இல்லை போல தெரிகிறது. புதிதாக ஜிம்மையே இவர்கள் ரீல்ஸ் போடும் இடமாக மாற்றி விட்டனர்.

வொர்க்கவுட் செய்கிறேன் என அங்கேயும் கவர்ச்சியை காட்டும் விதமாகவே வீடியோக்களை வெளியிட்டு காசு பார்த்து வருவதாக கூறுகின்றனர்.
ஷிவானி நாராயணன்: சமீபத்தில் பிக் பாஸ் பிரபலமான ஷிவானி நாராயணன் வெறித்தனமாக வொர்க்கவுட் செய்கிறேன் என வித்தியாசமாக ஜிம்மில் தாறுமாறாக வொர்க்கவுட் செய்த வீடியோவை வெளியிட்டு இருந்தார். அவரது நோக்கம் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதா? அல்லது அதன் மூலம் இளைஞர்களை ஈர்ப்பதா என பலரும் கன்ஃபியூஸ் ஆகி கமெண்ட்டுகளை போட்டு வந்தனர்.
லாஸ்லியா: பப்ளி கேர்ளாக இலங்கையில் இருந்து இறக்குமதியான லாஸ்லியா பிக் பாஸ் சீசன் 3க்கு பிறகு சினிமாவில் நடித்தும் அவருக்கு பிரெண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பா படங்கள் சொதப்பிய நிலையில், ஸ்லிம்மாக மாறி கோலிவுட்டில் எப்படியாவது இடம் பிடிக்க வேண்டும் என முயற்சித்து வருகிறார். அதற்காக அவரும் ஜிம்மிலேயே அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார்.
ஷாலு ஷம்மு: ஷிவானி நாராயணனை தொடர்ந்து ஷாலு ஷம்முவும் ஜிம்மில் வொர்க்கவுட் செய்யும் வீடியோ ஒன்றை போட்டிருந்தார். அந்த வீடியோவுக்கு கீழும் மோசமான கமெண்ட்டுகள் குவிந்தன. மேலும், எக்கச்சக்க லைக்குகள் கிடைக்க நினைத்ததை முடித்து விட்டோம் என அடுத்து ஃபேஷன் ஷோ காட்டுவது போல கவர்ச்சி உடைகளில் போட்டோஷூட் நடத்த கிளம்பி விட்டார்.
சபாஷ் சரியான போட்டி: பிக் பாஸ் ஷிவானி நாராயணன் பின்னழகை காட்டி வொர்க்கவுட் செய்து ரசிகர்களை கிறங்கடித்தால் நான் மட்டும் என்ன சும்மா இருப்பேனா என்கிற ரீதியில் தற்போது யாஷிகா ஆனந்தும் ஒரு ஜிம் வீடியோவை போட்டு ரசிகர்களை ஜில்லாக்கி உள்ளார்.
கிளாமர் உடைகளை அணிந்து போட்டோஷூட்கள் போட்டு ஒரு பக்கம் ஃபாலோயர்களை அதிகரிக்க இன்னொரு பக்கம் ஜிம் விளம்பரத்துக்கு ஜிம் விளம்பரமும் ஆச்சு ஃபாலோயர்களை அதிகரித்தோம் என தற்போது இளம் நடிகைகள் ஜிம் வீடியோக்களை வெளியிட ஆரம்பித்துள்ளனர் என நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஒல்லி பெல்லி: யாஷிகா ஆனந்த் தனது உடல் எடையை மீண்டும் குறைத்து ஒல்லி பெல்லியாக மாறப்போகிறேன் என கடுமையாக வொர்க்கவுட் செய்து வருகிறார். அடுத்து கலெக்டர் எனும் படத்தில் கலெக்டராகவே இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











