விளையாட்டு வினையா போச்சு.. கையில் எலும்பு முறிவு.. புலம்பும் யாஷிகா ஆனந்த்!
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளார். அதனுடன் சேர்த்து அவர் பகிர்ந்திருந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த பதிவில், "பள்ளிப் பருவத்தில் நான் மனதிற்குள் ஆசைப்பட்ட ஒரு விஷயம் இப்போது நிஜமாகிவிட்டது. இந்தச் சாக்கைக் காட்டி பள்ளியை 'கட்' அடிக்க வேண்டும் என்று நான் எப்போதும் நினைத்திருக்கிறேன். வாழ்க்கையில் நாம் என்ன விரும்புகிறோமோ அதில் கவனமாக இருக்க வேண்டும், மேலும், சமீபத்தில் Pickleball விளையாடிக் கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்து கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். "நண்பர்களே, கவலைப்பட வேண்டாம்... இது ஒரு சிறிய காயம் தான். இதுவும் கடந்து போகும்," என்று தனது ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.

யாஷிகா ஆனந்த்: இந்த பதிவு வெளியாகியதும், அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் பலரும் "விரைவில் குணமடையுங்கள்" என்று வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். சிலர் அவர் மன உறுதியையும், நேர்மறையான அணுகுமுறையையும் பாராட்டி வருகிறார்கள். தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த், இப்படிப்பட்ட நேரங்களிலும் தனது அனுபவத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வது, அவருக்கும் ரசிகர்களுக்கும் உள்ள நெருக்கத்தை வெளிப்படுத்துகிறது.
மாடல் அழகியான யாஷிகா ஆனந்த், கவலை வேண்டாம் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து 'துருவங்கள் பதினாறு' "இருட்டு அறையில் முரட்டு குத்து" மணியார் குடும்பம், நோட்டா, கழுகு 2, பெஸ்டி ஆகிய படங்களில் முக்கிய ரோலில் நடித்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்த போது, விபத்தில் சிக்கினார். இதில் யாஷிகாவின் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகா பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிட்டத்தட்ட மூன்று மாதத்திற்கு மேல் நடக்க முடியாமல் சிரமப்பட்ட இவர், பின் அதில் இருந்து மீண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











