நீச்சல் குளத்தில் பிகினி உடையில் என்னம்மா ஆட்டம் போடுறாரு யாஷிகா.. லைகர் பாட்டு வேற!
சென்னை: நடிகை யாஷிகா நீச்சல் குளத்தில் லைகர் பட பாட்டுக்கு கவர்ச்சி நடனம் போடும் வீடியோவை ஷேர் செய்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.
இருட்டறையில் முரட்டுக் குத்து, ஜாம்பி, தி லெஜண்ட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் ஹாட் போட்டோக்களையும் வீடியோக்களையும் களமிறக்கி கதிகலங்க வைத்து வருகிறார்.
கார் விபத்துக்கு பிறகு 3 மாதங்கள் ஓய்வில் இருந்த யாஷிகா மீண்டும் பழையபடி கவர்ச்சி ரூட்டில் ரசிகர்களை உற்சாகப்படுத்த ஆரம்பித்துள்ளார்.

கவர்ச்சிப் புயல்
கோலிவுட்டின் கவர்ச்சிப் புயலாக கெத்துக் காட்டி வருகிறார் யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்ட யாஷிகாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்தனர். சுமார் 35 லட்சம் பேர் அவரை ஃபாலோ செய்து வரும் நிலையில், ரசிகர்களுக்காக தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

எஸ்ஜே சூர்யாவுக்கு ஜோடி
கடந்த வாரம் எஸ்ஜே சூர்யா மற்றும் யாஷிகா ஆனந்த் நடித்த கடமை செய் திரைப்படம் தியேட்டரில் வெளியானது. ஆனால், அந்த படம் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை என்பது போல படு தோல்வியை சந்தித்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு படம் வெளியானதே போதும் என்கிற சந்தோஷத்தில் யாஷிகா நீச்சல் குளத்தில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ளார்.

நீச்சல் குளத்தில் குத்தாட்டம்
இந்நிலையில், தற்போது யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டுள்ள வீடியோவை ஷேர் செய்து ரசிகர்களை திணறடித்துள்ளார். பிகினி உடையில் சொட்டச் சொட்ட நனைந்தபடி மொத்த அழகையும் காட்டி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார் யாஷிகா ஆனந்த்.

வாட்டர் பேபி
அந்த வீடியோவை ஷேர் செய்துள்ள நடிகை யாஷிகா ஆனந்த் Pool Baby என கேப்ஷன் போட்டு ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் கவர்ந்துள்ளார். இருட்டு அறையில் முரட்டுக் குத்து 3ம் பாகத்திலேயே நீங்க நடிக்கலாம் என ரசிகர்கள் தாறுமாறாக கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

லைகர் பாடலுக்கு
வரும் ஆகஸ்ட் 25ம் தேதி விஜய் தேவரகொண்டாவின் லைகர் திரைப்படம் திரைக்கு வருகிறது. இந்நிலையில், அந்த படத்துக்கு புரமோஷன் செய்வது போல லைகர் படத்தின் ஆஃபாத் பாடலை போட்டு தனது நீச்சல் குள வீடியோவை டிரெண்ட் செய்து வருகிறார் யாஷிகா ஆனந்த்.


Click it and Unblock the Notifications











