மஞ்சள் கலர் சேலை.. பச்சை கலர் ஜாக்கெட்.. செம்ம க்யூட் யாஷிகா.. ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து!
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் பொங்கல் திருநாளை முன்னிட்டு மஞ்சள் நிற சேலை கட்டி அழகாக எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
தலை நிறைய பூ வைத்து அழகாக அலங்கரிக்கப்பட்ட சிலையாக மாறியுள்ள யாஷிகா ஆனந்தின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
யாஷிகாவின் தீவிர ரசிகர்கள் அவருக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பொங்கல் போட்டோஷூட்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு யாஷிகா ஆனந்த், பாரம்பரிய உடையில் அழகாக சீவி சிங்காரித்து அம்சமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கியுள்ளார்.

பொங்கல் வாழ்த்து
மஞ்சள் கலர் புடவை, பச்சை கலர் ஜாக்கெட் அணிந்து செம க்யூட்டாக இருக்கும் தனது புகைப்படத்தை பதிவிட்ட யாஷிகா ஆனந்த், தனது ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இளைஞர்களை கட்டி இழுக்கும்
ஜீ தமிழ் சினிமா விருது விழா நேற்று மாலை 4 மணிக்கு பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா ஆனந்த், நெருப்புடா, ரெளடி பேபி உள்ளிட்ட பாடல்களுக்கு செம்ம கிளாமராக நடனமாடினார். அதன் புரொமோவில் இளைஞர்களை கட்டி இழுக்கும் பேரழகி யாஷிகா ஆனந்த் என்ற கேப்ஷனை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
மாடலிங் பேபி
இருட்டு அறையில் முரட்டு குத்து, பிக்பாஸ் என தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ள யாஷிகா ஆனந்த், மாடலிங் துறையிலும் அதிக அளவில் ஈடுபாட்டுடன் இருக்கிறார். அவ்வப்போது, தனது கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

குவிகிறது லைக்ஸ்
பொங்கலை முன்னிட்டு யாஷிகா தற்போது பதிவிட்டுள்ள க்யூட் சாரி புகைப்படத்திற்கு 60 ஆயிரத்திற்கும் மேலான லைக்குகள் குவிந்து வருகின்றன.

கார்ஜியஸ் கேர்ள்
படுகவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு நெட்டிசன்களிடம் திட்டு வாங்கும் யாஷிகா ஆனந்த், அழகாக மஞ்சள் நிற சேலையில், ரம்மியமாக இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கார்ஜியஸ் கேர்ள், க்யூட்டா இருக்கீங்க, பேரழகி, தலைவி என புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











