குணமாகி வரும் யாஷிகா ஆனந்த்.. மீண்டும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகி என்ன பண்றாரு பாருங்க!
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் மீண்டும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகி வருகிறார்.
கடந்த ஜூலை 24ம் தேதி நண்பர்களுடன் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு ரெசார்ட்டில் டின்னர் முடித்து விட்டு திரும்பிய போது நடிகை யாஷிகா ஓட்டி வந்த கார் கோர விபத்தில் சிக்கியது.
இதில் காரில் இருந்த அனைவரும் படுகாயம் அடைந்தனர். யாஷிகாவின் தோழி வள்ளி செட்டி பவனி (28) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
8 மாத குழந்தை கிளாடி சாராவின் இதய நோய் சிகிச்சைக்கு உதவுங்கள் ப்ளீஸ்

தப்பித்த யாஷிகா
அதிர்ஷ்டவசமாக நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது மற்ற நண்பர்கள் அந்த விபத்தில் படு காயங்களுடன் உயிர் தப்பினார். மருத்துவமனையில் படுகாயங்களுடன் சேர்க்கப்பட்ட நடிகை யாஷிகா ஆனந்த் சுயநினைவுக்கு வந்த பிறகு தான் அவரது தோழி பவனி உயிரிழந்தது அவருக்குத் தெரிய வந்ததாக நடிகை யாஷிகாவே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சீட் பெல்ட் போடாததால்
நடிகை யாஷிகாவின் உயிர்த் தோழி வள்ளிசெட்டி பவனி காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்துள்ளார். ஒரே இருட்டாக இருந்ததால் யாஷிகா ஆனந்த் டிவைடரில் மோத அவர் ஓட்டி வந்த அந்த கார் மூன்று முறை பல்டி அடித்து கோர விபத்தை சந்தித்துள்ளது. சீட் பெல்ட் போடாமல் இருந்த அவரது தோழி பவனி காற்று வாங்குவதற்காக கண்ணாடியையும் இறக்கி விட்டு இருந்த நிலையில், விபத்து நேர்ந்த உடன் வெளியே தூக்கி வீசப்பட்டு தலையில் அடிப்பட்டதாக யாஷிகா தெரிவித்து இருந்தார்.

போதையில் இல்லை
மேலும், தான் எந்தவொரு பார்ட்டிக்கும் செல்லவில்லை என்றும் அது நண்பர்களுடனான சின்ன டின்னர் மட்டுமே என்றும் இரவு 11 மணிக்கே நாங்கள் திரும்பி விட்டோம். நான் மது அருந்தவில்லை மற்றும் எந்தவொரு போதைப் பொருளையும் செலுத்திக் கொள்ளவில்லை என்றும் தன்னை சுற்றி வலம் வந்த வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருந்தார் நடிகை யாஷிகா ஆனந்த்.

குற்ற உணர்ச்சி
தனது தோழியின் மரணத்திற்கு தானே காரணமாகி விட்டேன் என்கிற குற்ற உணர்ச்சியில் எப்போதுமே நான் வாழ்வேன் என நடிகை யாஷிகா ஆனந்த் உருக்கமாக ட்வீட் ஒன்றையும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் பதிவிட்டு இருந்தார். அதன் பிறகு ஓய்வு எடுத்து வரும் யாஷிகா ஆனந்த் மீண்டும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆகி வருகிறார்.

மீண்டும் ஆக்டிவ்
ஆகஸ்ட் 3ம் தேதிக்கு பிறகு ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் பக்கம் வராமல் இருந்த நடிகை யாஷிகா, தற்போது தான் விபத்தில் சிக்கியதை அறிந்ததும் பதறிப் போய் ட்வீட் போட்டு நலம் விசாரித்தவர்கள் அனைவருக்கும் ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து வருகிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.

எஸ்.ஜே. சூர்யாவுக்கு நன்றி
எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக கடமையை செய் எனும் படத்தில் நடித்து வந்த யாஷிகா ஆனந்த் திடீரென விபத்தில் சிக்கியது தெரிந்தும் எஸ்.ஜே. சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் யாஷிகா ஆனந்த் உடன் இருக்கும் கடமையை செய் படத்தின் ஸ்டில்களை ஷேர் செய்து, யாஷிகா ஆனந்த் ஒரு நல்ல பர்ஃபார்மர் என்பதை இந்த படத்தின் மூலம் ரசிகர்களுக்கு உணர்த்துவார் என நம்புகிறேன். அவர் விரைவில் குணமடைந்து வர வேண்டுகிறேன் என ட்வீட் போட்டு இருந்தார். அந்த ட்வீட்டுக்கு தற்போது நன்றி தெரிவித்துள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.

சனம்க்கு தேங்க்ஸ்
பிக் பாஸ் பிரபலமான யாஷிகா ஆனந்த் விபத்தில் சிக்கினார் என்பதை அறிந்ததும் மற்றொரு பிக் பாஸ் பிரபலமான நடிகை சனம் ஷெட்டி சீக்கிரம் யாஷிகா குணமாக வேண்டும் என பிரார்த்தனை செய்திருந்தார். அந்த ட்வீட்டுக்கும் நன்றி சொல்லும் எமோஜியை போட்டு தான் மீண்டும் சமூக வலைதளங்களுக்கு வந்து விட்டதை உணர்த்தி இருக்கிறார்.

விஜய் ஆண்டனிக்கும் நன்றி
நீங்க சீக்கிரம் குணமாகி பழையபடி வருவீங்க யாஷிகா.. எங்களுடைய பிரார்த்தனை எப்போதுமே உங்களுடன் இருக்கும் என நடிகர் விஜய் ஆண்டனி போட்ட ட்வீட்டுக்கும் இப்போ நன்றி கூறியுள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த். சல்பர், கடமையை செய், இவன் தான் உத்தமன் என பல படங்கள் யாஷிகா நடிப்பில் வெளியாக காத்திருக்கின்றன.

எப்படி இருக்கீங்க யாஷிகா
தான் விபத்தில் சிக்கியதை அறிந்ததும் தனக்காக பதறிப் போய் ட்வீட் போட்டு பிரார்த்தனை செய்தவர்களின் ட்வீட்களுக்கு நன்றி சொல்லி வரும் நடிகை யாஷிகாவின் ட்வீட்டுக்கு கீழே ஏகப்பட்ட ரசிகர்கள் நீங்க எப்படி இருக்கீங்க.. எல்லாம் குணமாகி விட்டதா? மறுபடியும் உங்களை பழையபடி ஹாப்பியா பார்க்கணும்னு கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
Recommended Video

போட்டோ போடுங்க
யாஷிகா ஆனந்த் மீண்டும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகி உள்ள நிலையில், இப்போ எப்படி இருக்கீங்க அக்கா என ரசிகர்கள் விசாரித்து வருகின்றனர். மேலும், உங்களுடைய லேட்டஸ்ட் போட்டோவை வெளியிடுங்க பழையபடி கெத்தான யாஷிகாவாக வெளிய வாங்க என்றும் பல்வேறு ரசிகர்கள் நடிகை யாஷிகா ஆனந்த் ட்வீட்டுக்கு கீழே கமெண்ட்டுகளை பொழிந்து வருகின்றனர். சிலர் நல்லா ரெஸ்ட் எடுங்க, உடல் நலம் முழுவதுமாக தேறியவுடன் பணிக்கு செல்லலாம், உடல் நலம் தான் ரொம்ப முக்கியம் என்றும் அறிவுரைகளையும் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications