விஜய், திரிஷாவை இணைத்து தவறான முறையில் பேச்சா?.. முற்றிய பிரச்னை.. மௌனம் கலைத்த நடிகை யாஷிகா ஆனந்த்

சென்னை: விஜய்யிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்று சங்கீதா கேட்ட சில நாட்களிலேயே விஜய்யும், திரிஷாவும் ஜோடியாக திருமணம் ஒன்றுக்கு சென்றார்கள். அதனையடுத்து முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் முதல் வரிசையில் இருக்கை, அஜித்தின் தாய் மறைவுக்கு மீண்டும் ஒன்றாக வந்தார்கள். இந்நிலையில் அவர்கள் குறித்து யாஷிகா ஆனந்த் தவறான முறையில் பேசினார் என சர்ச்சை எழுந்த சூழலில் அதற்கு அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.

விஜய்க்கு இன்னொரு நடிகையுடன் உறவு இருப்பதாக கூறி விவாகரத்து கேட்டிருக்கிறார் சங்கீதா. அவரது கூற்றை உண்மையாக்கும்படி விஜய்யும், திரிஷாவும் ஒன்றாகவே வலம் வருகிறார்கள். முதலமைச்சராவதற்கு முன்னர் ஜோடியாக ஒரு திருமணத்துக்கு சென்றார்கள். முதலமைச்சரான பின்னர் அஜித்தின் தாய் மறைவுக்கு ஒன்றாக சென்றார்கள். இப்படி நல்லது, கெட்டவைகளில் ஜோடியாக கலந்துகொள்வது வழக்கமாகியிருப்பதை பார்த்து தவெகவினரும் அதிர்ச்சிதான் அடைந்திருக்கிறார்கள்.

Yashika Anand Breaks Silence on Viral Vijay-Trisha Comment Screenshot Calls It Fake
Photo Credit:

வேறு வழி இல்லை: ஆனால் வேறு வழி இல்லாமல் முட்டு கொடுக்க வேண்டிய சூழலில்தான் அவர்களும் இருக்கிறார்கள். முக்கியமாக விஜய்யின் அரசு ரீதியான செயல்பாடுகளை ஒருதரப்பினர் விமர்சிக்கும்போது; அதில் திரிஷாவின் பெயரையும் அத்துமீறி இழுத்துவிடுகிறார்கள். பெர்சனலாகவும் அவர்கள் போடும் கமெண்ட்ஸ்கள் எல்லாம் ரசிக்கும்படி இல்லை. பொது வாழ்வில் விஜய்யின் செயல்பாடுகளை விமர்சிக்கும்போது திரிஷாவின் பெயரை இழுப்பது வேண்டாத வேலை என விர்ச்சுவல் வாரியர்ஸ் கதறுகிறார்கள்.

Also Read
சூப்பர் பவர் இருக்கா? ரீல்ஸ் ஆடியன்ஸைக் குறிவைத்த 'சூப்பர் பேச்சுலர்ஸ்' மினி சீரிஸ் விமர்சனம்!
சூப்பர் பவர் இருக்கா? ரீல்ஸ் ஆடியன்ஸைக் குறிவைத்த 'சூப்பர் பேச்சுலர்ஸ்' மினி சீரிஸ் விமர்சனம்!

கூல் விஜய்: இத்தனை நடந்தாலும் விஜய்யும், திரிஷாவும் கூலாகவே இருக்கிறார்கள். வரும் விமர்சனங்கள் அத்தனையையும் எதிர்கொண்டு முதலமைச்சராக முனைப்போடு செயல்பட்டுவருகிறார். ஆனால் அவை ஆக்கப்பூர்வமாக இருக்கின்றனவா என்பதில் இங்கே விவாதம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க நேற்று சோஷியல் மீடியாவில் வைரல் தீயாக ஒரு புகைப்படம் பரவியது. அதாவது நடிகை யாஷிகா ஆனந்த்; விஜய், திரிஷா பற்றி தவறான முறையில் பேசியது போல் இருந்தது.

என்ன இருந்தது?: சமீபத்தில் யாஷிகா கடற்கரையில் ஃபோட்டோஷூட் செய்திருந்தார். அந்த வீடியோவை ஒருவர் ஷேர் செய்து, 'பொது இடத்தில் அரைகுறை ஆடையோடு இப்படி செய்தால் முதலமைச்சர் விஜய் உங்கள் மீது நடவடிக்கை எடுப்பார்' என சொன்னது போன்றும்; அதற்கு யாஷிகா, 'அவர் நடிகை திரிஷாவோடு பிஸியாக இருப்பார்' என்று கூறியது மாதிரியும் அந்தப் ஸ்க்ரீன் ஷாட் சுற்றியது.

விளக்கமளித்த யாஷிகா: இந்நிலையில் அதுதொடர்பாக யாஷிகா ஆனந்த் விளக்கமளித்திருக்கிறார். அவர் தன் எக்ஸ் பக்கத்தில், "இப்போது பரவிவரும் விஷயம் முழுக்க முழுக்க என்னை கீழே தள்ளிவிட்டு, தங்களது பேஜுகளுக்கு பிரபலத்தை பெறுவதற்காக சிலர் உருவாக்கிய கற்பனை கதைதான் அது. நான் தவறான ஒன்றை பயன்படுத்துவது மாதிரி முன்பு ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலியான படத்தை பரப்பினார்கள். இதுவும் அதே மாதிரியான ஒரு அபத்தம்தான். இப்படிப்பட்ட மோசமான பேஜுகள் லைக்குகளுக்காக என்ன செய்தாலும் அதை நம்பாமல் புறக்கணித்துவிடுங்கள்" என குறிப்பிட்டிருக்கிறார்.

முன்னதாக, யாஷிகா ஆனந்த் கோலிவுட்டில் அடையாளம் பெற்ற நடிகைகளில் ஒருவர். பெரும்பாலும் கவர்ச்சி வேடங்களில் மட்டுமே நடிக்கும் அவர் சில வருடங்களுக்கு முன்பு மோசமான விபத்தில் சிக்கி மீண்டு வந்திருக்கிறார். அதனையடுத்து தொடர்ந்து இது மாதிரியான பல ஃபோட்டோஷூட்டுகளை அவர் செய்துவருவது கவனிக்கத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X