பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா யாஷிகா ஆனந்த்?.. அவரே கொடுத்த தரமான பதிலடி

சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளும்படியான நடிகையாக வலம் வந்தார். ஆனால் இடையில் அவர் ஒரு விபத்தை சந்தித்ததை அடுத்து சில காலம் பெட் ரெஸ்ட்டில் இருந்தார். பிறகு உடல்நலம் தேறிய அவர் பகீரா உள்ளிட்ட படங்களில் நடித்தார். அடுத்ததாக அவரது நடிப்பில் இவன்தான் உத்தமன் உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன. இதற்கிடையே அவரும் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் ரிஷியும் காதலித்துவருவதாகவும் ஒரு பேச்சு பலமாக அடிபட்டது குறிப்பிடத்தக்கது.

சந்தானம் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு உருவான இனிமே இப்படித்தான் என்ற படத்தில் முதல்முதலாக நடிக்க கமிட்டானார். இந்தச் சூழலில் அவர் இதனையடுத்து கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் நீச்சல் டீச்சர் கதாபாத்திரத்தில் முதல்முதலாக திரையில் தோன்றினார் யாஷிகா. அதன் பிறகு கார்த்திக் நரேனின் முதல் படமான துருவங்கள் பதினாறு படத்திலும் ஸ்ருதி என்ற கதாபாத்திரத்தில் தோன்றினார். இதனயடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

Yashika Anand has said that she did not do plastic surgery Here are the details

இருட்டு அறையில் முரட்டு குத்து: யாஷிகா ஆனந்த்துக்கு இதுவரை பெரிய பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. மேலும் அவர் நடித்த படமும் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்படவும் இல்லை. ஆனால் அவர் நடித்த ஒரு படம் சர்ச்சையாகி பேசுபோருளானது. கடந்த 2018ஆம் ஆண்டு சந்தோஷ் இயக்கத்தில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படம்தான் அது.அடல்ட் காட்சிகள் நிறைந்த அந்தப் படத்தில் காவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் யாஷிகா. படம் வெற்றியடையாவிட்டாலும் அந்தப் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் யாஷிகா பக்கம் திரும்பியது.

விபத்தை சந்தித்த யாஷிகா ஆனந்த்: இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. ஆனால் அந்த நேரத்தில் சில வருடங்களுக்கு முன்பு ஈசிஆர் ரோட்டில் அதிவேகமாக காரில் சென்றதால் விபத்தில் சிக்கினார். அதில் அவரது தோழி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த யாஷிகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்தார்.

மீண்டும் ஆக்டிவ்: முழுக்க முழுக்க ஓய்வில் இருந்த யாஷிகா ஆனந்த் கொஞ்சம் கொஞ்சமாக உடல்நலம் தேறி மீண்டும் ஆக்டிவ்வாக மாறினார். அதனையடுத்து தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கும் அவர்; படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன்படி விபத்திலிருந்து மீண்ட அவர் பகீரா, சில நொடிகளில், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது உள்ளிட்ட படங்களில் நடித்தார். அடுத்ததாக அவரது நடிப்பில் சில படங்கள் வரவிருக்கின்றன.

காதல்: இதற்கிடையே அவரும் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் ரிஷியும் காதலித்துவருவதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின. இருந்தாலும் தாங்கள் காதலிக்கிறோமா இல்லையா என்பது குறித்து இரண்டு பேரும் இன்னும் எதுவும் சொல்லாமல் இருக்கின்றனர்.

பிளாஸ்டிக் சர்ஜரி?: இந்நிலையில் யாஷிகா ஆனந்த் தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடும்போதெல்லாம் சில ரசிகர்கள், கமெண்ட்ஸ் செக்‌ஷனில் யாஷிகா ஆனந்த் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார். அதனால்தான் விபத்துக்கு பிறகும் இவ்வளவு அழகாக இருக்கிறார் என்று கூறிவந்தனர். இதனைக் கண்டு பொறுத்து பொறுத்து பார்த்த அவர் தற்போது அதற்கு பதிலளித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'அழகுக்காக நான் எந்த பிளாஸ்டிக் சர்ஜரியும் செய்யவில்லை' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X