Don't Miss!
- News
காஷ்மீரில் ராகுலுக்கு எதிர்ப்பா?.. ஜம்முவில் அடுத்தடுத்து வெடித்த குண்டுகள்.. 6 பேர் படுகாயம்.. ஷாக்
- Technology
பெரிய மனுஷன்பா! Google-ல் குற்றம் கண்டுபிடித்த 2 இந்தியர்கள்.. ரூ.18 லட்சத்தை அள்ளிக்கொடுத்த சுந்தர் பிச்சை!
- Lifestyle
புதிதாக பிறந்த குழந்தைக்கு தண்ணீர் கொடுக்கலாமா? எத்தனை மாதத்தில் தண்ணீர் கொடுப்பது பாதுகாப்பானது?
- Automobiles
120வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஹார்லிடேவிட்சன்! 7 லிமிடெட் எடிசன் பைக்குகளை தயாரிக்க முடிவு!
- Sports
திடீரென கீழே விழுந்த ஹர்திக் பாண்ட்யா.. ஒரு நிமிடம் அமைதியான மொத்த அரங்கம்.. இறுதியில் வந்த ட்விஸ்ட்
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Finance
பெண்கள் ஐபிஎல் 2023: 30 நிறுவனங்கள் போட்டி.. யாருக்கு கிடைக்கும் ஜாக்பாட்..!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
நண்பர்களுடன் கதறி அழும் யாஷிகா… காரணம் புரியாமல் குழம்பிய ரசிகர்கள் !
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான யாஷிகா ஆனந்த் கதறி அழும் வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Recommended Video
மாடல் அழகியான யாஷிகா, கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் தனது அறிமுகத்தை கொடுத்தார்.
இதையடுத்து, ஜாம்பி, துருவங்கள் பதினாறு போன்ற திரைப்படங்களில் நடித்த இவர், இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வரத் தொடங்கினார்
அமிதாப்பின் JHUND Review: எளிய மக்களுக்கு வாய்ப்புக்கொடுத்து பாருங்கள்...ஆணித்தரமாக சொல்லும் படம்

யாஷிகாஆனந்த்
விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அந்த ஷோவின் போது, அந்த வீட்டில் குட்டி குட்டி டவுசர் போட்டுக் கொண்டு ரசிகர்களை ஏக்க பெருமூச்சு விடவைத்தார். அவரின் க்யூட் பேச்சு மற்றும் அழகால் ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

பிக்பாஸ் வீட்டில்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு திரைப்படம், சோஷியல் மீடியா, போட்டோஷூட் என படு பிஸியாக இருந்த யாஷிகா ஆனந்த், கடந்த ஆண்டு ஒரு மோசமான விபத்தில் சிக்கினார். புதுச்சேரியில் ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டுவிட்டு, சென்னை திரும்பிக்கொண்டு இருக்கும் போது கார் விபத்துக்குள்ளானது.

காலில் முறிவு
இந்த கோர விபத்தில் யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் யாஷிகாவுக்கு கால், மற்றும் இடுப்பு பகுதியில் முறிவு ஏற்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். திட்டத்தட்ட 3 மாதம் படுத்த படுக்கையாக இருந்த யாஷிகாக தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி கைவசம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.
கதறி அழும் வீடியோ
மீண்டும் கவர்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் யாஷிகா ஆனந்த், நண்பர்களுடன் கதறி அழும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் எதுக்கு இப்படி கும்பலா சேர்ந்து அழுறீங்க என்றும், சிலர் தோழியை நினைச்சி அழுறீங்களா என்றும் கேட்டு வருகின்றனர். இந்த வீடியோவில் யாஷிகா மேக்கப் இல்லாமல் படு கேவலமாக உள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.