அரபிக் குத்து பாட்டுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்ட யாஷிகா ஆனந்த்.. குவியும் ஆபாச கமெண்ட்ஸ்!

சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் அரபிக் குத்து பாடலுக்கு படு கவர்ச்சியாக ஆடியுள்ள நடனம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

கார் விபத்துக்கு பிறகு உடலில் ஏற்பட்ட காயங்கள் சரியான நிலையில், மீண்டும் மாடலிங் போட்டோஷூட், நடிப்பு என பிசியாகி உள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.

இந்நிலையில், பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடலுக்கு இவரும் தனது ஆட்டத்தை போட்டுள்ளார்.

இதுதான் டிரெண்டிங்

இதுதான் டிரெண்டிங்

வெறும் 7 நாட்களில் 70 மில்லியன் பார்வைகளை யூடியூப் தளத்தில் கடந்து மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது நடிகர் விஜய்யின் அரபிக் குத்து பாடல். கூடிய விரைவில் 100 மில்லியனை தாண்டி செல்லும் நிலையில், இந்த பாடல் தான் இப்போதைய டிரெண்ட் என உணர்ந்து கொண்ட ஏகப்பட்ட பிரபலங்கள், இந்த பாடலுக்கு நடனமாடும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சமந்தா முதல் அஞ்சனா வரை

சமந்தா முதல் அஞ்சனா வரை

பூஜா ஹெக்டே, சமந்தா, அனிருத், அபர்ணா தாஸ், நமீதா மாரிமுத்து, அஞ்சனா ரங்கன், டிடி, இயக்குநர் நெல்சனின் மகன் ஆத்விக் என ஏகப்பட்ட பிரபலங்கள் பீஸ்ட்டின் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடும் வீடியோக்களை தொடர்ந்து ஷேர் செய்து டிரெண்ட் செய்து வருகின்றனர். ஏராளமான பொதுமக்கள் வயது வித்தியாசம் இன்றி இந்த பாடலுக்கு நடனமாடி வருகின்றனர்.

யாஷிகாவின் அரபிக் குத்து

யாஷிகாவின் அரபிக் குத்து

இந்நிலையில், நடிகை யாஷிகா ஆனந்த் மட்டும் சும்மா இருப்பாரா என்ன? அவரும் தன் பங்குக்கு தாராளமான கவர்ச்சி உடையை அணிந்து கொண்டு செம குத்தாட்டத்தை போட்டுள்ளார். பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே கூட இந்தளவுக்கு கவர்ச்சியாக அந்த பாட்டுக்கு நடனமாடி இருக்க மாட்டார் என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ஆபாச கமெண்ட்டுகள்

ஆபாச கமெண்ட்டுகள்

யாஷிகா ஆனந்தின் கவர்ச்சிகரமான புகைப்படங்களுக்கே ஆபாச கமெண்ட்டுகள் குவிந்து வந்த நிலையில், அரபிக் குத்து பாடலுக்கு அவர் போட்டுள்ள கவர்ச்சி குத்தாட்டத்தை பார்த்த நெட்டிசன்கள் அருவருக்கத்தக்க ஏகப்பட்ட ஆபாச கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். இதுபோன்ற வீடியோக்களை ஷேர் செய்யும் போது கமெண்ட் செக்‌ஷனை ஆஃப் செய்து விடுங்கள் யாஷிகா என்றும் அவரது ரசிகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

நன்றி யாஷிகா

நன்றி யாஷிகா

அதேசமயம், நடிகர் விஜய்யின் ரசிகர்கள் யாஷிகா ஆனந்த் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடியதை பார்த்து நன்றி தெரிவித்து வருகின்றனர். கோலிவுட்டின் ஒட்டுமொத்த இளம் பிரபலங்களும் 'ஹலமிதி ஹபிபோ' என அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி விடுவார்கள் என்றே தோன்றுகிறது

அஜித் ரசிகர்கள் கேள்வி

அஜித் ரசிகர்கள் கேள்வி

விஜய் ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ள நிலையில், இந்த பாடலை பார்த்து கடுப்பான அஜித் ரசிகர்கள், நீங்கள் அஜித் ரசிகை என சொல்லிக் கொண்டு இப்படி அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடலாமா? வரும் வியாழக்கிழமை வெளியாகவுள்ள வலிமை படத்து எந்த புரமோஷனையும் ஏன் பண்ணல? என்கிற கேள்வியையும் எழுப்பி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X