'சூர்யாவை திருமணம் செய்துகொள்ள ஆசை'.... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யாஷிகா!
சூர்யாவை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படும் பிரபல நடிகை!
Recommended Video

சென்னை: சூர்யாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகக் கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை யாஷிகா.
துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்த யாஷிகா, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆபாசமாக உடையணிந்தது, மகத்துடன் காதல் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.

அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர், நிறைய படங்களில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். அதோடு சமூக வலைதளப் பக்கங்களிலும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட யாஷிகா, ரசிகர்களுக்கு ரூபாய் நோட்டில் ஆட்டோகிராப் போட்டு சர்ச்சையில் சிக்கினார். அந்த பிரச்சினையே தீராத நிலையில், சூர்யா ரசிகர்களின் கோபத்திற்கு தற்போது ஆளாகியிருக்கிறார்.
தனது சமூக வலைதளப்பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு லைவாக பதிலளித்தபோது, ரசிகர் ஒருவர் உங்களுக்கு சூர்யாவை பிடிக்குமா என கேள்வி எழுப்பினார். அதற்கு சூர்யாவின் புகைப்படத்தை பகிர்ந்து பதிலளித்த யாஷிகா, அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகக் கூறினார்.
இந்த பதிலை கேட்டு சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் மட்டுமன்றி ஜோதிகா ரசிகர்களும் கோபமடைந்துள்ளனர். ஏற்கனவே சூர்யாவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும் விஷயம் யாஷிகாவுக்கு தெரியாதா என அவர்கள் வசைபாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











