யாஷிகாவோட ‘அந்த’ வீடியோ மட்டுமல்ல.. ‘இந்த’ வீடியோவும் வைரல் தான்.. ரசிகர்கள் டிப்ஸ் வேற கேட்குறாங்க!
யாஷிகாவின் லிப்லாக் வீடியோவைப் போலவே, அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவும் வைரலாகியுள்ளது.
Recommended Video
சென்னை: யாஷிகாவிற்கு லைவ் சாட்டில் ஆண் நண்பர் ஒருவர் லிப்லாக் முத்தம் கொடுத்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், அவரது மற்றொரு வீடியோவும் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பிக் பாஸ் சீசன் 2வில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் யாஷிகா. அந்நிகழ்ச்சியில் அவர் கவர்ச்சியாக ஆடை அணிந்ததும், மஹத்துடன் சேர்ந்து செய்த சில செயல்களும் மக்களை முகம் சுளிக்க வைத்தது. பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது மஹத்தை காதலிப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அவர் தான் டைட்டில் வின்னர் ஆவார் எனப் பலரும் எதிர்பார்த்த நிலையில், கடைசி வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
கவர்ச்சிப் படங்கள்:
ஆனாலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன. சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பவரான யாஷிகா, அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை அதில் பதிவேற்றம் செய்து வருகிறார். இதனால் அவருக்கு சமூகவலைதளங்களிலும் ரசிகர்கள் ஏராளம்.

லிப் லாக் வீடியோ:
இந்நிலையில், கடந்த மாதம் தனது நெருங்கிய தோழி ஐஸ்வர்யாவுடன் பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற ஓராண்டு நிறைவைக் கொண்டாடினர். அப்போது லைவ் சாட்டிங் செய்து கொண்டிருந்தபோது, யாஷிகாவிற்கு ஆண் நண்பர் ஒருவர் லிப்லாக் கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

செம போதை:
இந்த வீடியோவில் யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் போதையில் இருப்பது போல் காணப்படுகின்றனர். நண்பர் முத்தமிடுவதை சிரித்துக் கொண்டே யாஷிகாவும் ஏற்றுக் கொள்வது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

வைரல் வீடியோ:
இது ஒருபுறம் இருக்க, கடந்த சில நாட்களுக்கு முன்பு யாஷிகா வெளியிட்ட மற்றொரு வீடியோவும் வைரலாகி உள்ளது. முந்தையது போல் இல்லை இது. இந்த வீடியோவில் உடலை வளைத்து உடற்பயிற்சி செய்கிறார் யாஷிகா. மிகவும் கஷ்டமான அந்த உடற்பயிற்சியை எளிதாக அவர் செய்கிறார்.

டிப்ஸ்:
உடலை எவ்வளவு பிட்டாக அவர் வைத்திருக்கிறார் என இதைப் பார்த்து யாஷிகா ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர். தங்களுக்கும் உடலை பிட்டாக வைத்துக் கொள்ள அவர்கள் டிப்ஸ் கேட்டு வருகின்றனர். இந்த வீடியோவையும் இதுவரை ஒருலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











