முதல் முறையாக யாஷிகா வெளியிட்ட சிகிச்சை வீடியோ...கதறி அழும் ரசிகர்கள்

சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான யாஷிகா ஆனந்த், தொடர்ந்து பல படங்களில் நடித்தார். தற்போது சில படங்களில் லீட் ரோலில் நடிக்க கமிட்டாகி இருந்தார். எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக லீட் ரோலில் யாஷிகா நடித்து வந்த கடமையை செய் படம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

இந்நிலையில் ஜுலை 21 ம் தேதி நண்பர்களுடன் காரில் சென்ற போது விபத்தில் சிக்கிய யாஷிகா, மிக மோசமாக காயமடைந்தார். இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிசெட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இரு நண்பர்கள் சிறு காயங்களுடன் தப்பித்துக் கொண்டனர்.

காரை யாஷிகா வேகமாக ஓட்டியதே விபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. சீட்பெல்ட் அணியாத நிலையில் காரை அதிவேகமாக அவர் இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்த கார் மீடியனில் பயங்கரமாக மோதி, பல முறை உருண்டு, சாலையின் ஓரம் கவிழ்ந்துள்ளது.

யாஷிகாவிற்காக பிரார்த்தனை

யாஷிகாவிற்காக பிரார்த்தனை

இதில் இடுப்பில் பல இடங்களிலும், வலது காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்ட யாஷிகாவிற்கு பல சர்ஜரிகள் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைய ஏராளமானோர் பிரார்த்தனை செய்து வருகின்றனர். பிக்பாஸ் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று பார்த்து, யாஷிகாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

உருக்கமான பதிவு

உருக்கமான பதிவு

சுயநினைவிற்கு வந்த பிறகு தோழி உயிரிழந்ததை கேட்டு மனமுடைந்த யாஷிகா, இன்ஸ்டாகிராமில் மிக உருக்கமாக கருத்து பதிவிட்டார். அதைத் தொடர்ந்து சமீபத்தில் தனது உடல்நிலை குறித்து அவரே அப்டேட் வெளியிட்டார். அது பலரையும் கலங்க வைத்தது.

படுத்த படுக்கையாகிட்டேன்

படுத்த படுக்கையாகிட்டேன்

அதில் அவர், எனது இடுப்பு மற்றும் கால் பகுதியில் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் எடுத்த ஐந்து மாதங்களுக்கு என்னால் எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது. நான் படுத்த படுக்கையாகி விட்டேன். இயற்கை உபாதைகளைக் கூட படுக்கையிலேயே கழிக்கிறேன். என்னால் வலது புறமோ அல்லது இடது புறமோ திரும்பக் கூடாது முடியாது. அதே போல் தான் இன்னும் சில நாட்கள் நான் கழிக்க வேண்டும். பின் பகுதி முழுவதும் காயம் ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தார்.

ஏராளமான தையல்

ஏராளமான தையல்

விபத்தில் யாஷிகாவின் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டுள்ளதாம். உடலின் பெரும்பாலான பகுதிகளில் பேண்டைட் போடப்பட்டுள்ளதாம். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வெளியான யாஷிகாவின் வீடியோ

வெளியான யாஷிகாவின் வீடியோ

சில நாட்களுக்கு முன் காலில் கட்டுடன் படுத்த படுக்கையாக இருக்கும் யாஷிகாவின் ஃபோட்டோ வெளியானது. இந்நிலையில் தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோவும் வெளியாகி உள்ளது. யாஷிகாவின் இந்த பரிதாப நிலையை பார்த்து ரசிகர்கள் பலர் கண்ணீர் விட்டு, கதறி அழுது வருகின்றனர்.

தொடரும் போலீஸ் விசாரணை

தொடரும் போலீஸ் விசாரணை

அதே சமயம் யாஷிகாவிடம் விபத்து குறித்து தொடர்ந்து விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த விபத்து தொடர்பாக யாஷிகா மீது 3 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. யாஷிகாவின் ஓட்டுனர் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X