'அடுத்த சன்னிலியோன் நீங்க தான்'.... பிரபல நடிகைக்கு பட்டம் கொடுத்த ரசிகர்கள்!

நடிகை யாஷிகா ஆனந்த் தான் அடுத்த சன்னி லியோன் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended Video

Cinema Seithigal சினிமா செய்திகள்

சென்னை: தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை யாஷிகாவை, நெட்டிசன்கள் வறுத்தெடுத்துவிட்டனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மிகவும் பிரபலமாகிவிட்டார் நடிகை யாஷிகா ஆனந்த். மகத்துடன் ஒரு படம், ஆரவ்வுடன் ராஜபீமா மற்றும் சில படங்கள் என பிஸியாக நடித்து வருகிறார் அவர்.

இதற்கிடையே தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதை அவ்வப்போது உறுதி செய்துகொள்கிறார். அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ரசிகர்களும் தங்கள் கமெண்டுகளை உடனுக்குடன் பதிவிட்டு வருகின்றனர்.

கவர்ச்சி போட்டோ

பல சமயங்களில் யாஷிகா தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அது போல் சமீபத்தில் படுகவர்ச்சியான போட்டோ ஒன்றை வெளியிட்டு, "உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்" என யாஷிகா பதிவிட்டிருந்தார்.

வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்

வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்

ஆனால் அவர் நினைத்தது போல் இல்லாமல், இந்த போட்டோவை வைத்து நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்துவிட்டனர். பலரும் வாய்க்கு வந்தபடி எல்லாம் வசைமழை பொழிந்துவிட்டனர். அதில் ஒரு பெண் யாஷிகாவை மிகக்கடுமையாக சாடியுள்ளார். 'உனக்கு வெட்கமே இல்லையா' என யாஷிகாவை அவர் கேட்டுள்ளார்.

யாஷிகா பதிலடி

யாஷிகா பதிலடி

அதற்கு பதிலளித்துள்ள யாஷிகா, "பிரச்சினை எனது உடலில் இல்லை. உங்கள் கண்களில் தான் இருக்கிறது. உனது விருப்பப்படி நீ பார்க்கலாம். அமைதியாக இரு", என பதிவிட்டுள்ளார்.

அன்பு மழை

அன்பு மழை

மிஸ்டர் அன்னோன் பாய் என்பவர், " யாஷிகா நீ எப்படி டிரஸ் பண்ணணும் என்று நான் சொல்லக்கூடாது. ஆனால் நீ அழகான ஆடையை அணியலாம் என நான் சொல்வேன்", என அன்பாக தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

அட்வைஸ் மழை

அட்வைஸ் மழை

"நீ எந்தளவுக்கு உன் உடம்பை காட்டுறியோ, அந்தளவுக்கு நீ வாய்ப்புகளை இழப்பாய். காமெடியன்களுடன் தான் ஜோடி சேர்ப்பார்கள். பிறகு நைட் பார்ட்டி, மது என காலம் கழிக்கலாம். சில ஆண்டுகள் கழித்து இதை நீ உணர்வாய்", என ஒருவர் அட்வைஸ் மழை பொழிந்துள்ளார்.

அடுத்த சன்னிலியோன்

அடுத்த சன்னிலியோன்

ஒரு சிலர் யாஷிகாவிற்கு ஆதரவாக கமெண்ட் செய்துள்ளனர். மற்ற சிலர் அடுத்த சன்னிலியோன் யாஷிகா தான் என வர்ணித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X