ஆரண்ய காண்டம் படத்துல அந்த சீன் நடிக்க ரொம்பவே கஷ்டப்பட்டேன்.. நடிகை யாஸ்மின் பொன்னப்பா பளிச்!

சென்னை: தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான ஆரண்ய காண்டம் திரைப்படம் 2 தேசிய விருதுகளை வென்றது. அந்த படத்தில் ஜாக்கி ஷெராஃப், ரவி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மாடல் அழகியாக வலம் வந்த யாஸ்மின் பொன்னப்பா முதல் படத்திலேயே தனது போல்டான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் கவர்ந்திருப்பார்.

பல ஆண்டுகள் கழித்து யாஸ்மின் பொன்னப்பா 'இடி மின்னல் காதல்’ படத்தில் நடித்துள்ளார். அந்த படத்துக்கான புரமோஷனின் போது அவர் அளித்த பேட்டியில், ஆரண்ய காண்டம் படத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டு நடிச்ச சீன் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.

Yasmin Ponnappa reveals which scene she struggled more in Aranya Kaandam movie

ஜாக்கி ஷெராஃபிடம் அடிமையாக: ஆரண்ய காண்டம் படத்தின் முதல் காட்சியிலேயே ஜாக்கி ஷெராஃப் உடன் உடலுறவு கொள்ளும் காட்சியில் யாஸ்மின் பொன்னப்பா நடித்து பகீர் கிளப்பியிருப்பார். வயதான காரணத்தினால் கேங்ஸ்டர் சிங்கப்பெருமாளாக நடித்திருந்த ஜாக்கி ஷெராஃப்புக்கு ஆண்மை பிரச்சனை ஏற்பட்டது போல அந்த காட்சி உருவாக்கப்பட்டிருக்கும்.

சிங்கிள் டேக்கில் நடித்தேன்: சென்னை மற்றும் மும்பை ஃபேஷன் விளம்பரங்களில் மாடலிங் செய்து வந்த யாஸ்மின் பொன்னப்பாவை ஒரு விளம்பர பலகையில் பார்த்து தனது படத்துக்கு இவர் தான் நாயகி என ஃபிக்ஸ் செய்திருக்கிறார் தியாகராஜன் குமாரராஜா. படம் தொடங்குவதற்கு முன்னதாக குரு சோமசுந்தரத்திடம் 10 நாட்கள் நடிப்பு பயிற்சியை மேற்கொண்ட யாஸ்மின் பொன்னப்பா சிங்கிள் டேக்கில் பல கஷ்டமான சீன்களை அசால்ட்டாக நடித்து அசத்தியிருக்கிறார்.

சப்பை தான்: ”எல்லா ஆம்பளையும் சப்பை தான்.. சப்பையும் ஒரு ஆம்பளை தான்” என யாஸ்மின் பொன்னப்பா பேசிய வசனம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. 7ஜி ரெயின்போ காலனி படத்திற்கு பிறகு சில படங்களில் ரவிகிருஷ்ணா நடித்தாலும் அவருக்கு எந்த படமும் பெரிதாக கை கொடுக்கவில்லை. கேடி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்த அவருக்கு ஆரண்ய காண்டம் சரியான கம்பேக் படமாக மாறியது. அதில், சப்பையாக நடித்த ரவி கிருஷ்ணாவை பார்த்துத்தான் இந்த வசனத்தை யாஸ்மின் பேசியிருப்பார்.

அந்த சீன் தான் கஷ்டம்: உடலுறவு கொள்ளும் காட்சிகளில் எல்லாம் போல்டாக அதிக டேக்குகள் வாங்காமல் நடித்து அசத்திய யாஸ்மினுக்கு படத்திலேயே ரொம்ப கஷ்டமான காட்சி அந்த சமோசாவை கையில் வைத்துக் கொண்டு சாப்பிட வருவது போல ஆக்டிங் செய்து விட்டு வசனம் பேசும் காட்சி தான் கஷ்டமாகி விட்டது என்றும் பல டேக்குகள் வாங்கியதாகவும் கூறியுள்ளார்.

வாய்ப்புகளே கிடைக்கல: ஆரண்ய காண்டம் படத்திற்கு பிறகு ரவி கிருஷ்ணாவை போல இவரும் பெரிதாக எந்த படத்திலும் நடிக்கவே இல்லை. 2017ம் ஆண்டு கல்கி எனும் குறும்படத்தில் நடித்த இவர், இந்த வாரம் வெளியான ’இடி மின்னல் காதல்’ படத்தில் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X