twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தம், தண்ணி, துக்கடா டிரெஸ்: சர்ச்சை மேல் சர்ச்சையில் சிக்கிய அமலா பால் #yearender2018

    By Siva
    |

    சென்னை: சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியிட்டு அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார் அமலா பால்.

    2018ம் ஆண்டு கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு அமலா பால் தனது நடிப்பிற்காக பேசப்பட்டதை விட சர்ச்சைக்குரிய புகைப்படங்களுக்காக பேசப்பட்டது தான் அதிகம்.

    சமூக வலைதளங்களில் ஏதாவது புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்புவதில் நிபுணர் ஆகிவிட்டார் அவர். அப்படி அவர் சிக்கியது பற்றி பார்ப்போம்.

     அமலா பால்

    அமலா பால்

    சேலத்தில் நகைக்கடையை திறந்து வைக்க அமலா பால் சேலை அணிந்து வந்தார். சேலையா இது என்று ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். அவர் ஃப்ரில் வைத்த சேலை அணிந்திருந்தார். மேலும் மாடலாக ஜாக்கெட் போட்டிருந்தார். அதனால் தான் நெட்டிசன்கள் குழப்பம் அடைந்து அவரை கலாய்த்தனர்.

    சர்ச்சை

    சர்ச்சை

    கையில் ஒயின் வைத்துக் கொண்டிருந்தபோது எடுத்த புகைப்படத்தை அமலா பால் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதை பார்த்தவர்கள், குடும்ப பெண்ணாம்மா நீங்க என்று அறிவுரை வழங்கத் துவங்கிவிட்டனர்.

    போஸ்டர்

    போஸ்டர்

    ஆடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அமலா பால் ஆடை எதுவும் இல்லாமல் டாய்லெட் பேப்பரை மட்டும் உடலில் சுற்றிக் கொண்டு போஸ் கொடுத்தது சர்ச்சையானது.

    சிகரெட்

    சிகரெட்

    சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டும் ஆட்கள் இருக்கும் சமூக வலைதளத்தில் தான் தம்மடிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு வம்பில் சிக்கினார் அமலா பால். அவர் வேண்டும் என்றே இப்படி புகைப்படங்களை வெளியிடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

     வேட்டி

    வேட்டி

    காவி வேட்டி அணிந்து அதை தொடை தெரிய ஏத்திக் கட்டி கையில் மதுபாட்டிலுடன் போஸ் கொடுத்தார் அமலா பால். அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் அவரை கழுவிக் கழுவி ஊத்தினார்கள்.

    English summary
    Actress Amala Paul got slammed for her controversial pictures on social media.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X