For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Year Ender 2022 : இந்த ஆண்டு பிகினியில் இணையத்தை திக்குமுக்காட வைத்த நடிகைகள்!

  |

  சென்னை : 2022ம் ஆண்டு விடைபெற இன்னும் சில நாட்களே இருப்பதால், இந்த ஆண்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து நாம் சற்றே ரீவைண்ட் செய்து பார்த்து வருகிறோம்.

  அந்த வகையில் 2022ம் ஆண்டு பிகினியில் வலம் வந்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்த நடிகைகள் யார் யார் என்று பார்க்கலாமா.

  இந்த பட்டியலில் ஜான்வி கபூர் முதல் சாக்ஷி அகர்வால் என அனைத்து நடிகைகளும் அடங்குவார்கள், இதில் யாருக்கு முதலிடம் என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

   சமந்தா விவாகரத்து, தீபிகா படுகோன் காவி பிகினி... தொடரும் சர்ச்சைகள் குறித்து சூடான திவ்யா ஸ்பந்தனா சமந்தா விவாகரத்து, தீபிகா படுகோன் காவி பிகினி... தொடரும் சர்ச்சைகள் குறித்து சூடான திவ்யா ஸ்பந்தனா

  நடிகை பூஜா ஹெக்டே

  நடிகை பூஜா ஹெக்டே

  மும்பையில் பிறந்து கோலிவுட்டில் அறிமுகமாகி தற்போது டோலிவுட்டை ஓர் கலக்கு கலக்கி வருகிறார் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தமிழில் நடித்த முகமுடி படம் ஓடாததால், தெலுங்கு பக்கம் சென்ற பூஜா அங்கு பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார். மீண்டும் தமிழில் விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்தார். ஆனால், அதுவும் சரிபட்டுவராததால், மீண்டும் தெலுங்குக்கே சென்று விட்டார். அண்மையில், மாலத்தீவுக்கு சென்ற இவர் பிகினியில் இருக்கும் தாறுமாறான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

  சாக்‌ஷி அகர்வால்

  சாக்‌ஷி அகர்வால்

  சாக்‌ஷி அகர்வால் காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்திருந்தார். ஆனால் அதைவிட பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூலம் தான் தமிழக மக்களுக்கு நன்கு அறிமுகம் ஆனார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், தனது பிறந்த நாள் அதுவுமா பிகினி புகைப்படங்களை பகிர்ந்து இணையத்தை அதிரவைத்தார்.

  தர்ஷா குப்தா

  தர்ஷா குப்தா

  ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் தர்ஷா குப்தா. அதனை தொடர்ந்து மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட சில சின்னத்திரை தொடர்களில் இவர் நடித்துள்ளார். அதன் பின் குக் வித் கோமாளி-2 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார் தர்ஷா குப்தா. இன்ஸ்டா குயிலான வலம் வந்து கவர்ச்சி புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் பிகினியில் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்தார்.

  சர்ச்சையான பிகினி

  சர்ச்சையான பிகினி

  ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்துள்ள பதான், படத்தில் இடம்பெற்றுள்ள பேஷ்ரம் ரங் பாடலில், தீபிகா படுகோனே காவி நிற பிகினி அணிந்திருந்தார். இது இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டதாக கூறி இந்துத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

  ஜான்வி கபூர்

  ஜான்வி கபூர்

  தயாரிப்பாளர் போனி கபூர், ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர், பாலிவுட்டில் அடுத்தடுத்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.இவர் விரைவில் தென்னிந்திய திரையுலகிலும் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இவரை தெலுங்கு படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற ஜான்வி கபூர், அங்கு எடுத்த பிகினி போட்டோவை இணையத்தில் பகிர்ந்து இருந்தார்.

  சாரா அலிகான்

  சாரா அலிகான்

  சைப் அலிகானின் மகளான சாரா அலிகான் தந்தையைப் போன்று படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைபட்டு இப்போது பல படங்களில் நடித்து அந்த ஆசையை நிறைவெற்றி வருகிறார். ரன்வீர் சிங்குடன் இவர் நடித்து வெளியான சிம்பா படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து இப்போது தன்னுடைய நடிப்பு திறமையால் பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சாரா அலிகான், ஒரு பிகினி விரும்பி என்று சொல்லலாம் எப்போதும் பிகினி புகைப்படத்தை பதிவிடுவதில் ஆர்வமாக உள்ளார்.

  English summary
  year ender 2022 : bikini,Shakshi agarwal, Dharsha Gupda, Janvi kapoor Actresses who rocked the Social media in bikinis this year
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X