கயித்து கட்டிலில் மல்லாக்க படுத்திருக்கும் பார்வதி நாயர்..உத்துப் பார்த்து உச்சு கொட்டும் ரசிகர்கள்!
சென்னை: அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் மூலம் ஒரு நல்ல நடிகையாக அறிமுகமான பார்வதி நாயருக்கு, அந்த படத்திற்கு பிறகு பெரிய நடிகர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வராததால், பட வாய்ப்பை எதிர்பார்த்து இணையத்தில் அவ்வப்போது போட்டோக்களை ஷேர் செய்து வந்தார். அதன் பலனாக இவருக்கு இப்போது கோட் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ள நிலையில், அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என விதவிதமான போட்டோவை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.

மலையாள திரையுலகை அடிப்படையாய் கொண்டு நடிக்க ஆரம்பித்தவர் நடிகை பார்வதி நாயர். இவர் தமிழில் நிமிர்ந்து நில் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து அறிமுகமாகிய பின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் பிரபலமடைந்தவர். அந்த படம் அருண் விஜய்க்கு எப்படி திருப்பு முனையாக அமைந்ததோ அதை போல, இவருக்கு அந்த படம் பெயர் சொல்லும் படமாக அமைந்தது. அந்த படத்தில் அருண் விஜய்யின் மனைவியாக நடித்து பெயர் எடுத்தார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

பார்வதி நாயர்: தமிழில் பார்த்திபன் இயக்கத்தில் உருவான கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில், அவர் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். இந்த படத்திற்கு அவருக்கு ரைசிங் ஸ்டார் என்ற தலைப்பின் கீழ் எடிசன் விருதுகள் வழங்கப்பட்டது. இவர் சமீபத்தில் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் லோகேஷ் கனகராஜின் எழுத்தில் உருவான வெள்ள ராஜா எனும் இணைய தொடரில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அந்த தொடரில், பாபி சிம்ஹா, காயத்ரி சங்கர் யுதன் பாலாஜி, காளி வெங்கட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர் .

க்யூட் போட்டோஸ்: தற்போது இவர் ட்விட்டரில் சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பாலோவேர்களையும், இன்ஸ்டாகிராமில் ஏழு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்களை வைத்து இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் பயன்பாட்டாளர்கள் அதிகம் அதே நேரத்தில் இன்ஸ்டாகிராமில் தான் நடிகைகள் அதிகம் கவர்ச்சி மிகுந்த போட்டோசூட்களையும் புகைப்படங்களையும் பதிவேற்றுகின்றனர். அந்த வகையில் பார்வதி நாயரும் கயித்து கட்டிலில் மல்லாக்காப் படுத்துக்கொண்டு இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோ வெளியான நில மணி நேரத்திலேயே அதிக லைக்குகளை பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











