என்னை பத்தி கேள்விப்பட்டது எல்லாம் உண்மை தான்: தமன்னா

By Siva

சென்னை: தன்னை பற்றி ரசிகர்கள் கேள்விப்பட்டது உண்மை தான் என்று தெரிவித்துள்ளார் தமன்னா.

தமன்னா சயீரா நரசிம்ம ரெட்டி, தட் இஸ் மகாலட்சுமி ஆகிய இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து முடித்துள்ளார். பாலிவுட்டில் சூப்பர் டூப்பர் ஹிட்டான குயீன் படத்தின் தெலுங்கு ரீமேக் தான் இந்த தட் இஸ் மகாலட்சுமி ஆகும்.

Yes, it is true: Says Tamanna

மேலும் சுந்தர் சி. இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படத்தில் தனது காட்சிகளை நடித்துக் கொடுத்துவிட்டார் தமன்னா. இந்நிலையில் தமன்னாவுக்கு மாப்பிள்ளை தேடுவதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து தமன்னா கூறியதாவது,

திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்துவிட்டேன். எனக்கு மாப்பிள்ளை பார்க்கும் பொறுப்பை பெற்றோரிடம் கொடுத்துவிட்டேன். அவர்கள் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

தமன்னா அமெரிக்காவை சேர்ந்த மருத்துவர் ஒருவரை காதலிப்பதாகவும், இந்த ஆண்டே அவரை திருமணம் செய்யப் போவதாகவும் முதலில் பேச்சு கிளம்பியது. இது குறித்து அறிந்த தமன்னாவோ, நான் யாரையும் காதலிக்கவில்லை, எனக்கு திருமணம் நிச்சயமானால் நானே அறிவிப்பு வெளியிடுவேன் என்றார்.

ஒரு நாள் கிரிக்கெட் வீரர், மறு நாள் நடிகர், தற்போது மருத்துவரா என்று கேட்டு கடுப்பானார் தமன்னா. தமன்னாவும் பிரபல நடிகர் ஒருவரும் காதலிப்பதாக முன்பு பேசப்பட்டது. ஆனால் அந்த நடிகர் மீது எந்த ஃபீலிங்குமே இல்லை என்று தெளிவாக கூறிவிட்டார் தமன்னா.

13 வயதில் இருந்து நடித்துக் கொண்டிருக்கும் தமன்னா தமிழ், தெலுங்கு திரையுலகில் ஒரு ரவுண்டு வந்துவிட்டார். அழகும், திறமையும் இருந்தும் கூட அவரால் பாலிவுட்டில் மட்டும் ஜொலிக்க முடியவில்லை. இருப்பினும் அதுவும் ஒரு நாள் நடக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளார் தம்மு.

தமன்னாவுக்கு பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் அவருடன் மட்டும் முத்தக் காட்சியில் நடிக்க தயார் என்று முன்பு தெரிவித்தார் தமன்னா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X