அஜீத்துடன் நடிக்க ஆசைப்படும் மேலும் ஒரு ஹீரோயின்

By Siva

சென்னை: அஜீத் குமாருடன் நடிக்க சமந்தா விருப்பம் தெரிவித்துள்ளார்.

கோலிவுட்டுக்கு நடிக்க வரும் நாயகிகளும் சரி, நடித்துக் கொண்டிருக்கும் நாயகிகளும் சரி அதில் பலருக்கு இளையதளபதி விஜய் மற்றும் தல அஜீத் குமாருடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளது.

இந்நிலையில் முன்னணி நடிகை ஒருவர் அஜீத்துடன் நடிக்க விரும்புகிறார்.

சரண்யா நாக்

சரண்யா நாக்

காதல் படத்தில் நாயகி சந்தியாவுக்கு தோழியாக நடித்து தற்போது ஹீரோயினாக நடித்து வருபவர் சரண்யா நாக். அவர் சிறுமியாக இருக்கையில் அஜீத்திடம் நான் வளர்ந்ததும் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

பிந்து மாதவி

பிந்து மாதவி

அஜீத்துடன் நடிப்பதாக இருந்தால் அந்த படத்தில் நடிக்க எனக்கு சம்பளமே வேண்டாம் என்று தெரிவித்துள்ளார் பிந்து மாதவி. மேலும் அஜீத் படத்தில் நடிக்க வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

நஸ்ரியா

நஸ்ரியா

அஜீத் படம் என்றால் அது ஹீரோயின் தான் என்று இல்லை அவருக்கு தங்கையாகவோ, ஏன் மகளாகவோ நடிக்க கூட நான் ரெடி என்று நஸ்ரியா தெரிவித்திருந்தார்.

சமந்தா

சமந்தா

நீங்கள் எப்பொழுது அஜீத்துடன் நடிப்பீர்கள் என்று ரசிகர்கள் சமந்தாவிடம் ட்விட்டரில் கேட்டனர். அதற்கு அவர் நான் விரைவில் 'தல' உடன் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

விஜய், சூர்யா

விஜய், சூர்யா

சமந்தா தற்போது சூர்யாவுடன் அஞ்சான் மற்றும் விஜய்யுடன் தீரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X