யோகா... 'சினேகா ஆஹா'!

ஆம், சினேகா இப்போது யோகாவில் மிகத் தீவிரமாக உள்ளாராம்.
எப்படி இந்த மாற்றம்?
"இந்த பொலிவுக்கும் அழகுக்கும் காரணம் யோகா தான். தினமும் 2 மணி நேரம் யோகா பயிற்சி செய்கிறேன். இது எனக்கு நல்ல பலனை அளித்துள்ளது. சாப்பாடு விஷயத்திலும் கட்டுப்பாட்டுடன் இருக்கிறேன். நிறைய நேரங்களை என் குடும்பத்தினருடன் செலவிட விரும்புகிறேன்," என்றார்.
சினேகா தற்போது முரட்டுக்காளை, விடியல், நூற்றுக்கு நூறு படங்களில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் ரஜானா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தியில் மேட் டேட் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
ஆனால் எந்த மொழிக்குப் போனாலும் சினேகா தவறாமல் போடும் கண்டிஷன்: நீச்சல் உடையில் நடிக்க வற்புறுத்தாதீர்கள், என்பதுதானாம்!
Comments


Click it and Unblock the Notifications