‘துறுதுறு’ காஜல் அகர்வாலின் அழகின் ரகசியம் இது தான்...
சென்னை: தான் சுறுசுறுப்பாகவும், அழகாகவும் இருப்பதற்கு யோகா தான் முக்கியக் காரணம் என நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக பிசியாக நடித்து வருபவர் காஜல் அகர்வால். தமிழில் தற்போது பாலாஜி மோகன் இயக்கும் படத்துக்கு ஒப்பந்தமாகியுள்ளார். இதுபோக தெலுங்கில் மூன்று படங்களும், இந்தியில் ஒரு படமும் காஜல் கைவசம் உள்ளது.
இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தனது அழகின் ரகசியம் குறித்து மனம் திறந்துள்ளார் காஜல் அகர்வால். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பிடிக்காது....
எனக்கு ஒரே நேரத்தில் நிறைய படங்களில் நடிப்பது பிடிக்காது. ஒரு படத்தை முடித்து விட்டுதான் அடுத்த படத்துக்கு போக வேண்டும்.

முழு உழைப்பு...
அப்போதுதான் நடித்துக் கொண்டிருக்கும் படத்துக்கு முழு உழைப்பையும் கொடுக்க முடியும்.

தரமான படங்கள்...
குறைவான படங்களில் நடித்தாலும் அவை தரமான படங்களாக இருக்க வேண்டும். நிறைய தரமற்ற படங்களில் நடித்தால் நிலைக்க முடியாது.

கட்டுக்கோப்பான உடல்...
நான் அழகாக இருப்பதாகவும், உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துள்ளதாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதாக பலர் பாராட்டுகின்றனர்.

யோகா தான் காரணம்...
இதற்கு காரணம் யோகா. தினமும் யோகா பயிற்சி செய்கிறேன். அதுதான் என் அழகு ரகசியம்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











