பொண்டாட்டி பின்னாடி போறீங்க.. அங்கிருந்து வந்தது.. மாமனார் ஸ்ரீகாந்த்தை ஆஃப் செய்த சம்யுக்தா சண்முகநாதன்
சென்னை: நடிகை சம்யுக்தா சண்முகநாதனுக்கும், முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த்துக்கும் கடந்த வருடத்தில் திருமணம் நடந்து முடிந்தது. இரண்டு பேருக்குமே அது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. சம்யுக்தாவுக்கு ஏற்கனவே ஒரு மகன் இருக்கிறார். தற்போது அனிருதா, சம்யுக்தா, ராயன் (மகன்) ஆகிய மூன்று பேரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இந்நிலையில் தனது மாமனார் ஸ்ரீகாந்த் பற்றி அவர் பேசியிருக்கும் விஷயம் கலகலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பொறியியல் படிப்பை முடித்த சம்யுக்தா சண்முகநாதன் மாடலிங்கில் வெளிச்சாம் பெற்றார். அதன் பிறகு அவருக்கு சினிமா வாய்ப்புகள்; நடிகையாக மாறினார். அதன்படி ஷீ, காஃபி வித் காதல், காரி, குரு மூர்த்தி, வாரிசு,உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். ஆனால் அவர் நடித்த படங்கள் பெரிய வெற்றியை பெற்றுத்தரவில்லை. மெட்ராஸ் மாஃபியா கம்பெனி படத்தில் லீடு ரோலையும் ஏற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இன்னும் சில படங்களில் அவர் கமிட்டாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

திருமணம் செய்துகொண்ட சம்யுக்தா: இதற்கிடையே கார்த்திக் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். இரண்டு பேருக்கும் மகனும் பிறந்தான். சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கையில் சின்ன சின்ன விரிசல்கள் வந்தன. காலப்போக்கில் இந்த விரிசல் சரியாகிவிடும் என்று குடும்பத்தினரும், அவரது நண்பர்களும் நினைத்தார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த விரிசல் விரிவாகி விவாகரத்தில் முடிந்தது.
என்ன காரணம் தெரியுமா?: இரண்டு பேருக்கும் நடந்த விவாகரத்து பற்றி பலரும் பல கதைகளை சொல்ல ஆரம்பித்த சூழலில் ஒரு பேட்டியில் பேசிய சம்யுக்தா, "எனது கணவருக்கும் துபாயில் ஒரு பெண்ணுக்கும் இடையே உறவு இருந்திருக்கிறது. அந்த உறவில் அவர் நான்கு வருடங்கள் இருந்தார். கொரோனா லாக் டவுன் சமயத்தில்தான் நடந்தது" என்று கூறினார். அவர்களுக்கு கடந்த வருடம்தான் சட்டப்பூர்வமாக விவாகரத்து கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கிள் டூ மிங்கிள்: கார்த்திக்கை பிரிந்த பிறகு மகனை வளர்ப்பதிலும் திரைத்துறையில் தனது கரியரை வளர்ப்பதிலும் கவனம் செலுத்திவந்த அவருக்கு; முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்தின் மகனும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான அனிருதா ஸ்ரீகாந்த்துடன் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அனிருதாவும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர்தான். சம்யுக்தா - அனிருதாவின் காதலுக்கு வீட்டில் உடனடியாக சம்மதம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து கடந்த வருடத்தில் சிம்ப்பிளாக அவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள்.
ட்ரெண்டாகும் சம்யுக்தாவின் பேச்சு: இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் சம்யுக்தா. அவரிடம் அவரது மாமனாரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான ஸ்ரீகாந்த் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "அனிருதா ஸ்ரீகாந்த் என்னை பிங்கி என்றுதான் கூப்பிடுவார். ஒருமுறை எனது மாமனார் அவரிடம், 'டேய் அனி நீ உன் பிங்கி பின்னாலேயே போயிட்டு இருக்கியே.. இது நல்லா இல்லை' என கூறினார். உடனே நானோ, 'நீங்களும்தான் வித்யா ஆண்ட்டி (ஸ்ரீகாந்த் மனைவி) பின்னால் போகிறீர்கள். எல்லாம் அங்கேயிருந்து வந்ததுதானே என்று கூறினேன். இப்படி ஜாலியாக நாங்கள் பேசிக்கொண்டிருப்போம்" என்றார்.


Click it and Unblock the Notifications















