விஜய் ஆண்டனியின் ரொமான்ஸுக்கு 100 மார்க்.. பிளாஸ்ட் செய்த லப்பர் பந்து நடிகை ஸ்வாசிகா

சென்னை: சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் நூறு சாமி. அந்தப் படம் ஜூன் 19ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ஏற்கனவே சசியும், விஜய் ஆண்டனியும் சேர்ந்து பிச்சைக்காரன் என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்திருக்கிறார்கள். எனவே இப்படத்தின் மீதும் எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்நிலையில் விஜய் ஆண்டனியின் ரொமான்ஸ் குறித்து நடிகை ஸ்வாசிகா ஓபனாக பேசியிருக்கிறார்.

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சுக்ரன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் விஜய் ஆண்டனி. அந்தப் படத்தின் பாடல்கள் ஹிட்டடிக்க தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்தார். வித்தியாசமான ட்யூன்களை கொண்டு பாடல்களை தருவது, பாடலின் முதல் வார்த்தையை வித்தியாசமாக வைப்பது என அனைவரையும் வைப் செய்ய வைத்தார் அவர். நாக்கமுக்க, ஆத்திச்சுடி பாடல்கள் எல்லாம் வெளியான சமயத்தில் பயங்கர வைரல். இப்போது மாதிரி அப்போது சோஷியல் மீடியா இருந்திருந்தால் இன்னும் வைரலாகியிருக்கும்.

You Won t Even Notice It Swasika Rates Vijay Antony s Romance 100 100
Photo Credit:

நடிகராக விஜய் ஆண்டனி: தொடர்ச்சியாக இசையமைப்பாளர் என்ற முறையில் பிஸியாக இருந்த அவர் நான் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அதன் காரணமாக பிறந்த நம்பிக்கையில் சலீம், இந்தியா பாகிஸ்தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அவற்றில் சலீம், பிச்சைக்காரன் ஆகிய படங்கள் மட்டுமே ஹிட்டடித்தன. பிச்சைக்காரன் திரைப்படத்தை சசி இயக்கியிருந்தார்.

Also Read
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் எடுத்து 8 வருடங்கள் ஆகுது.. கொந்தளித்த இயக்குநர்.. கடைசியில் செம ட்விஸ்ட்!
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் எடுத்து 8 வருடங்கள் ஆகுது.. கொந்தளித்த இயக்குநர்.. கடைசியில் செம ட்விஸ்ட்!

மீண்டும் சசியுடன்: விஜய் ஆண்டனி சமீபத்தில் நடித்த எந்த திரைப்படமும் சரியாக போகவில்லை. சக்தி திருமகன் திரைப்படம் நல்ல படமாக இருந்தாலும் பெரிய அளவில் வசுலை அள்ளவில்லை. இப்போது அவர் மீண்டும் சசியின் இயக்கத்தில் நடித்திருக்கிறார். படத்துக்கு நூறு சாமி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதுவும் அம்மா சென்ட்டிமென்ட்டில்தான் உருவாகியிருக்கிறது. கண்டிப்பாக பிச்சைக்காரன் மாதிரி பெரிய ஹிட்டடிக்கும் என்றும் அடித்து சொல்கிறார்கள் திரைத்துறையினர்.

ட்ரெண்டாகும் பேட்டி: படமானது ஜூன் 19ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஸ்வாசிகா நடித்திருக்கிறார். இந்நிலையில் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்கள். அப்போது செய்தியாளர்களிடம் விஜய் ஆண்டனி, என்னுடைய ரொமான்ஸ் எப்படி இருக்கும் என்று ஹீரோயினிடம் கேளுங்கள் என கோர்த்துவிட்டார். அதற்கு பதிலளித்த ஸ்வாசிகா, 'விஜய் ஆண்டனியின் ரொமான்ஸுக்கு நூறு மார்க் கண்டிப்பாக கொடுக்கலாம். ஆனால் ஒன்று அவர் ரொமான்ஸ் செய்கிறார் என்றே தெரியாது. ரொம்ப இயல்பாக செய்வார்.

யாருக்குமே தெரியாது: அவர் க்யூட்டாக, பூக்கியாக ரொமான்ஸ் செய்வார். இந்தப் படத்திலும் அவரது கேரக்டர் இப்படித்தான்" என்றார். முன்னதாக, இதே செய்தியாளர் சந்திப்பின்போது, 'இன்னும் மூன்று ஆண்டுகளில் சென்னையிலிருந்து நான் வெளியேறிவிடுவேன். பொள்ளாச்சியில் செட்டில் ஆகலாம் என்று இருக்கிறேன். அதற்கு இடம் பார்க்கும் வேலைகள் எல்லாம் நடந்துகொண்டிருக்கின்றன" என சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X