கீர்த்தி சுரேஷ் குடிக்க மாட்டார்.. ஆனால் அந்த பழக்கம் இருக்கு.. ரொம்ப மோசம்.. சமந்தா இப்படி சொல்லிட்டாங்களே?
சென்னை: கீர்த்தி சுரேஷ் குடிக்க மாட்டார், ஆனால் அவரிடம் அதைவிட மோசமான ஒரு பழக்கம் இருக்கிறது. அது, 0.3 நொடிகளில் நடக்கும். இதை நீங்கள் எதிர்பார்க்கவே மாட்டீர்கள், அந்த அளவுக்கு அந்த பழக்கம் கீர்த்தி சுரேஷ்க்குள் இயல்பாகவே இருக்கிறது என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் நடிகைகளுக்கு மத்தியில் எப்போதும் நல்ல நட்பு இருந்து வருகிறது. தொழிலில் போட்டியாக இருந்தாலும் நடிகைகள் மிகவும் அன்பு செலுத்திக் கொள்ளும் இடத்தில் தான் எப்போதும் இருக்கிறார்கள். இது இப்போது மட்டுமல்லாமல் கடந்த காலத்திலும் இருந்தது. அதனால் தான் 80ஸ் நடிகைகள் இப்போதும் ரீ யூனியன் மீட்டிங் எல்லாம் நடத்துகிறார்கள். அதில் அத்தனை நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். அப்படி சமகால முன்னணி நடிகைகளும் நல்ல நட்புடன் இருக்கிறார்கள்.

அதில் நடிகை சமந்தா திரைத்துறையில் இருக்கிற அதாவது தென்னிந்திய சினிமா என்று மட்டுமல்லாமல் பாலிவுட் சினிமா உலகில் இருக்கும் நடிகைகளுடனும் அன்பாக பழகக் கூடியவர். கடந்த ஆண்டில் கூட நடிகை ஆலியா பட் நடித்த படத்தின் புரோமோசன் ஹைதராபாத்தில் புரோமோசன் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு சுமார் 6 மணி நேரத்திற்கு முன்னர் தான் சமந்தாவுக்கு போன் செய்து ஆலியா பட் அழைத்துள்ளார். சமந்தா கொஞ்சம் கூட யோசிக்காமல் நான் வருகிறேன் என்று சொல்லி, அந்த படத்தின் புரோமோசனில் கலந்து கொண்டார்.
குடிக்க மாட்டார்: அதேபோல் நடிகை நயன்தாராவுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்தார். இப்படி சமந்தா தனது சமகால நடிகைகளுடன் எப்போதும் அன்பு செலுத்துபவராகவே உள்ளார். இப்படி இருக்கையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை கீர்த்தி சுரேஷ் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது, கீர்த்தி சுரேஷ் குடிக்க மாட்டார்.
இந்த பழக்கம்: கீர்த்தி சுரேஷ் நடு இரவு இரண்டு மணிக்கு வந்தாலும், நீங்கள் ஓடிப் போக வேண்டும். அதற்கு காரணம், கீர்த்தி சுரேஷ் ஹைப்பர் மேக்ஸ் ஆகிவிடுவார். 0.3 நொடிக்குள் உங்களை கலாய்த்து டேமேஜ் செய்துவிடுவார். கீர்த்தி சுரேஷ்க்கு மிகவும் அற்புதமான நகைச்சுவை உணர்வு இருக்கிறது. எனக்கு தெரிந்த நபர்களில் அதிகம் சிரிக்க வைக்கும் பெண் அவர் தான்" என்று பாராட்டிப் பேசி உள்ளார்.

ரசிகர்கள்: கீர்த்தி சுரேஷ் குறித்து நடிகை சமந்தா இவ்வாறு பேசியது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டிலும் பிசியாக நடித்து வருகிறார். திருமணத்திற்குப் பிறகு அவர் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











