சிஎஸ்கே மேட்ச் பார்க்க வந்த தனுஷ்.. இளம் நடிகை பிரானா செய்த செயலை பாருங்க.. வைரலாகும் வீடியோ!
சென்னை: ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸை நேற்று ஓடவிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிப் பெற்றது. ஆரம்பத்தில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த சென்னை அணி சஞ்சு சாம்சனின் சதத்துக்குப் பிறகு கம்பேக் ஆகியுள்ளது. நேற்று நடந்த போட்டியை ஏகப்பட்ட கோலிவுட் பிரபலங்கள் சேப்பாக்கம் ஸ்டேடியத்துக்குச் சென்று கண்டு ரசித்தனர்.
'கர' திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், நடிகர் தனுஷ் நேற்று நடந்த சிஎஸ்கே போட்டியை கண்டு ரசித்தார். கடந்த சில ஆண்டுகளாகவே ஐபிஎல் போட்டிகளை தவறாமல் பார்த்து வருகிறார்.

இந்நிலையில், ஸ்டேடியத்தில் தனுஷை சந்தித்த நடிகை பிரானா வெளியிட்ட வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
யாரு இந்த பிரானா?: யாதும் அறியான், தேசிங்கு ராஜா 2, லத்தி போன்ற படங்களில் நடித்த நடிகை பிரானா இன்ஸ்டாகிராமில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த டிரான்ஸ்பரன்ட் உடை புகைப்படங்களில் உள்ளாடை தெரியும் விதமாக எடுத்த லேட்டஸ்ட் போஸ்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. "யாரும்மா நீ? இவ்வளவு நாள் எங்கே இருந்தாய்?" என்று ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கமெண்ட்கள் போட்டு வருகின்றனர்.
தனுஷை சந்தித்த சந்தோஷம்: வரும் ஏப்ரல் 30ம் தேதி தனுஷின் 'கர' படம் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜு நடித்த இந்த திரைப்படம் வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட போர் தாக்கத்தின் போது நம்ம ஊரில் நடைபெற்ற விஷயங்களை அடிப்படையாக கொண்டு ரிலீஸ் ஆக காத்திருக்கிறது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியை காண தனுஷ் சேப்பாக்கம் ஸ்டேடியம் சென்ற நிலையில், அங்கே அவரை சந்தித்த நடிகை பிரானா அவருடன் எடுத்துக் கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு அய்யோ தனுஷ் சாரை பார்த்துட்டேன் என்பது போல உருகியுள்ளார்.
குவியும் கமெண்ட்ஸ்: மஞ்சள் ஜெர்ஸி அணிந்துக் கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை உற்சாகப்படுத்திய பிரானா தனுஷை சந்தித்தபோது எடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள நிலையில், தனுஷ் சார் ஏதோ போட்டோவுக்குத்தான் போஸ் கொடுத்தது போல தெரிகிறது. நீங்க அதை வீடியோவாகவே எடுத்து வெளியிட்டு இருக்கீங்க என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











