என்ன மோனிகா டபுளா தெரியுறாங்க.. கூலி பாட்டுக்கு தொடை தெரிய ரீல்ஸ் போட ஆரம்பித்த இளம் பெண்கள்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் 50 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், அவர் நடித்துள்ள கூலி திரைப்படம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த வாரம் பாட்ஷா திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகியும் தியேட்டர்களில் ரஜினி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அனிருத் இசையில் ரஜினிகாந்த், டி. ராஜேந்தர் நடனமாட வெளியான சிக்கிடு பாடலை விட பூஜா ஹெக்டே மற்றும் செளபின் சாஹீர் ஆட்டம் போட்ட மோனிகா பாடல் வேறலெவலில் டிரெண்டாகி விட்டது.
சவதீகா, கனிமா, ஜிங்குச்சா பாடல்களுக்கு இந்த ஆண்டு ஏகப்பட்ட ரசிகர்கள் நடனமாடிய நிலையில், பூஜா ஹெக்டே போலவே சிகப்பு கலர் கவுன் அணிந்துக் கொண்டு ஹார்பர் பேக்கிரவுண்டில் இரு இளம் பெண்கள் போட்ட செம குத்தாட்டம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏகப்பட்ட பிரபலங்களும், இளம் பெண்களும் பூஜா ஹெக்டேவை ஓரங்கட்டும் அளவுக்கு மோனிகா பாடலுக்கு நடனமாடி வருகின்றனர்.
25 மில்லியன் வியூஸ்: பூஜா ஹெக்டே டான்ஸ் ஆடினாலே அந்த பாடல்கள் எல்லாம் குறைந்த பட்சம் 100 மில்லியன் வியூஸை கடந்து விடுகின்றன. புட்டபொம்மா, ஹலமிதி ஹபிபோ, கனிமா பாடல்களை தொடர்ந்து அவர் நடனமாடியுள்ள மோனிகா பாடல் இதுவரை 25 மில்லியன் வியூஸ்களை நெருங்கியுள்ளன. படம் வெளியாவதற்கு முன்பாகவே 50 மில்லியன் வியூஸை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையில் ஜெயிலர் படத்தில் வெளியான காவாலா பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்ததை போல இந்த பாடலும் ஹிட் அடித்துள்ளது.
பூஜா ஹெக்டேவுக்கு போட்டி: பல இளம்பெண்களும் பூஜா ஹெக்டே என்ன தொடையை காட்டி ஆடுவது, நாங்களும் அவரை விட கவர்ச்சியாக ஆடுகிறோம் பாருங்கள் என களத்தில் குதித்து ரீல்ஸ் வீடியோக்களாக போட்டு இளைஞர்களுக்கு கிளாமர் ட்ரீட் கொடுத்து வருகின்றனர். மேலும், மோனிகா பாடலையும் வேறலெவலில் வைரலாக்கி கூலி படத்துக்கு ஃப்ரீ புரமோஷனையும் செய்து வருகின்றனர்.
டபுள் மோனிகா: இந்நிலையில், இரு இளம்பெண்கள் பூஜா ஹெக்டே போலவே சிகப்பு நிற கவுன் உடையை அணிந்துக் கொண்டு ஒட்டுமொத்த தொடையழகும் தெரிய ஆட்டம் போட்டுள்ள வீடியோ ரீல்ஸ் தான் தற்போது சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது. பூஜா ஹெக்டே போலவே ஸ்டெப்ஸ் எல்லாம் தரமாக போட்டு அந்த இரு இளம் பெண்களும் ஆடியுள்ளனர். வந்துச்சே பீலிங்ஸ், அதீத சர்ப்ரைஸ் பாடல்களுக்கு கவர்ச்சி டான்ஸ் போட்டதை போல பலரும் இந்த பாடலுக்கும் ஓவர் கிளாமரில் ஆட்டம் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











