என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.. கெத்திகாவுக்கே டஃப்.. எல்லாருமே பாவாடையை இழுக்க ஆரம்பிச்சிட்டாங்களே!
சென்னை: நவீன், ஸ்ரீலீலா, கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடிப்பில் உருவாகியுள்ள ராபின் ஹுட் திரைப்படம் அடுத்த வாரம் மார்ச் 28ம் தேதி திரைக்கு வருகிறது. அந்த படத்தில் இடம்பெற்றுள்ள குத்தாட்ட பாடலான அதீத சர்ப்ரைஸ் பாடல் தான் தற்போது பீலிங்ஸ் பாடலை ஓவர்டேக் செய்துவிட்டு இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் ரீல்ஸ் பெண்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது.
இன்ஸ்டாகிராம் பிரபலமான கெத்திகா ஷர்மா ராபின் ஹுட் படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் உருவான அதீத சர்ப்ரைஸ் பாடலுக்கு மல்லிகைப்பூ ஜாக்கெட் அணிந்துக் கொண்டு பாவாடையை இழுத்துவிட்டு போட்ட நடனத்தை பார்த்து ஒட்டுமொத்த இணையமும் ஸ்தம்பித்து போய்விட்டது.
அதை விட கொடுமையாக தற்போது ஏகப்பட்ட இளம்பெண்கள் சர்ப்ரைஸ் காட்டுகிறேன் என பாவாடையை இழுத்துக் காட்டி நடனமாடுவதை பார்த்தாலே வாந்தி தான் வருகிறது என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
அதீத சர்ப்ரைஸ்: ஜி.வி. பிரகாஷ் குமார் தமிழில் தர்மான பாடல்களை கொடுத்து வரும் நிலையில், அஜித் குமாரின் குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் பாடல்கள் ஹிட் அடித்த நிலையில், ஜி.வி. பிரகாஷ் நடித்த கிங்ஸ்டன் படமும் அதன் பாடல்களும் ஃபிளாப் ஆகின. ஆனால், தெலுங்கில் நவீன், ஸ்ரீ லீலா நடிப்பில் வெளியாகப்போகும் ராபின் ஹுட் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் போட்ட இந்த அதீத சர்ப்ரைஸ் பாடல் பட்டித் தொட்டியெங்கும் செம ஹிட்டாகி விட்டது.

பீலிங்ஸுக்கு போட்டி: தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா செம ஃபீலிங்குடன் நடனமாடிய பீலிங்ஸ் பாடல் ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆட்டம் போட வைத்தது. மோசமான நடன அசைவுகளை கொண்ட பாடல் என விமர்சிக்கப்பட்ட அந்த பாடலுக்குத்தான் ஏகப்பட்ட ரீல்ஸ்கள் கடந்த ஆண்டு வெளியாகி டிரெண்டிங்கை தெறிக்கவிட்டது. இந்நிலையில், அதற்கு டஃப் கொடுக்கும் விதமாக கெத்திகா ஷர்மா நடனமாடியுள்ள அதீத சர்ப்ரைஸ் மாறியுள்ளது.
இளம் பெண்கள் அட்ராசிட்டி: அதீத சர்ப்ரைஸ் பாடலுக்கு ஏகப்பட்ட இளம் பெண்கள் மல்லிகைப்பூவை மாராப்பாக போட்டுக் கொண்டும் பாவாடையை இழுத்து விட்டும் நடனமாடுவது போல போடும் ரீல்ஸ்கள் ஒரிஜினலை விட தூக்கலாக உள்ளதாகவும் இளம் பெண்களை இந்த அளவுக்கு கெடுக்கும் அளவுக்கு நடன இயக்குந்ரகள் சமீப காலமாக படங்களுக்கு மோசமாக நடன அசைவுகளை கொடுத்து வருகின்றனர் என்றும் கண்டனங்களும் குவிந்து வருகின்றன.
இதுதான் புடிக்குது: இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும் இதுபோன்ற பாடல்கள் மற்றும் ஐட்டம் டான்ஸர்கள் ஆடும் நடனங்கள் தான் ரொம்பவே பிடிக்கிறது என்பதை தெரிந்துக் கொண்டுதான் படத்தின் புரமோஷனுக்காக இயக்குநர்களும் நடன இயக்குநர்களை இதுபோன்ற பாடல்களை உருவாக்க சொல்வதாகவும் சினிமா வட்டாரத்தில் வெளிப்படையாகவே பேசுகின்றனர். அதீத சர்ப்ரைஸ் பாடலே இப்படி ஆபாசமாக இருக்கிறது. இதை பீட் செய்கிறேன் என அடுத்த படத்தில் என்னவெல்லாம் கருமத்தை காட்டப் போகிறார்களோ என்கிற கேள்வி எழுந்துள்ளன. எம்புரான், சிக்கந்தர் படங்களுடன் சேர்ந்து மார்ச் 28ம் தேதி இந்த படமும் போட்டியில் களமிறங்குகிறது.


Click it and Unblock the Notifications











