பா. ரஞ்சித்தின் சல்பேட்டா நாயகி.. இவராமே.. செம ஹாட்டாக பேரு அடிபடுதே!

சென்னை: பா. ரஞ்சித் மற்றும் ஆர்யா இணையும் படத்தின் ஹீரோயின் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

பா. ரஞ்சித் தன்னை சுற்றி சமூகத்தில் நடக்கும் தவறுகள் மற்றும் பலவற்றை சமூகத்தை நோக்கி திருப்பி கூறும் இயக்குனர். இவரது படங்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் வேறு ஒரு இடத்திற்கு எடுத்து சென்றுள்ளது.

Young heroine in pa ranjith -arya movie

அட்டக்கத்தி என்ற படத்தை தனது முதல் திரைப்படமாக இயக்கினார். பா. ரஞ்சித் தனது முதல் திரைப்படத்திலே முத்திரை பதித்தார் ரஞ்சித். பின் இரண்டாவது படமாக கார்த்தியை வைத்து மெட்ராஸ் என்ற படத்தை இயக்கினார். ஒரு சுவரை வைத்து மற்றும் அதனை சுற்றி நகரும் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை போன்ற பல்வேறு விஷயங்களை படத்தில் வைத்து இருந்தார் இயக்குனர் பா. ரஞ்சித். இதற்கு அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து கபாலி மற்றும் காலா என்று வரிசையாக இரண்டு ஹிட் படங்களை கொடுத்தார். இயக்க வந்து சில படங்களை இயக்கிய இவருக்கு இது போன்ற ஒரு வாய்ப்பு கிடைத்தது அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டார் பா. ரஞ்சித்.

Young heroine in pa ranjith -arya movie

இதற்கு பின் தான் நீலம் புரோடக்சன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி தயாரிப்பாளர் ஆனார் இயக்குனர் பா. ரஞ்சித். தயாரிப்பாளர் ஆக இவர் தயாரித்த இரண்டு படங்களும் ஹிட் ஆகின. பரியெறும் பெருமாள் மற்றும் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ஆகிய படங்கள் இவர் தயாரித்தார்.

Young heroine in pa ranjith -arya movie

இந்த இரண்டு படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மற்றும் வசூல் சாதனை புரிந்தது. இவர் தயாரித்த பரியெறும் பெருமாள் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் இப்படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ்யை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கி வருகிறார். இதில் நடித்த அனைவருக்கும் ஒரு நல்ல அறிமுகமாக இப்படம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது பா. ரஞ்சித் ஆர்யாவை வைத்து குத்து சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் படத்தை இயக்கவுள்ளார், இப்படத்தின் தலைப்பு சல்பெட்டா என்று கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் ஹீரோயின் பற்றி ஒரு செய்தி சமூக வலைதளங்களில் உலா வருகிறது. போதை ஏறி புத்தி மாறி என்ற தமிழ் படம் மூலம் அறிமுகமான துஷாரா தான் இப்படத்தில் ஹீரோயின் ஆக நடிக்கப்போகிறார், என்றும் வட சென்னையில் வசிக்கும் ஒரு தைரியமான பெண் கதாபாத்திரத்தில் வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X